நடிப்பில் எனக்கு அத்தனை ஆர்வம் கிடையாது - சுஹாசினி

ஹிந்தியா அய்யோ வேண்டாம் - சுஹாசினி
நடிப்பில் எனக்கு அத்தனை ஆர்வம் கிடையாது - சுஹாசினி

சுஹாசினி என்றதும் மூக்கைச் சுளித்துச் சிரிக்கும் அந்த மேனரிசம் நினைவுக்கு வருகிறதல்லவா? ஓ ..அதுதானே அனைவரின் நெஞ்சத்தையும் கிள்ளியது.

ஒளிப்பதிவில் போதிய அறிவை பெற்றிருக்கும் சுஹாசினியின் பார்வை வித்தியாசமானது. அந்த பார்வைகள் வார்த்தைகளாக மாற்றம் பெரும் பொழுது சுஹாசினிக்குள் ஓளிந்திருக்கும் யதார்த்த சுஹாசினி மந்தகாசமாகப் புன்னகைக்கிறார்.

"பெண்ணை காமிரா உமனாக அங்கீகரிக்க திரைப்பட உலகம் முன்வருவதில்லை. காரணம்..அவள் பெண்ணாக இருப்பதுதான்.எனது ஸ்த்ரீத்துவம் எனக்கெதிராக இருந்தது. அதனால் காமிரா உமனாக ஒருநாள் காமிரா முடியவில்லை. என்றாவது ஒருநாள் காமிராவுமனாக வருவேன். திரையுலகில் திறமைக்கு வேலையில்லை..பரிச்சயம்தான் தேவை.

நடிப்பில் எனக்கு அத்தனை சிரத்தை ஆர்வம் கிடையாது. டெக்னிக்கல் பக்கம்தான் என்னை திருடிக்கொண்டது.கமர்ஷியல் சினிமா என்னை கவர முடியாமல் போயிற்று, நடிகையாக அங்கீகரிப்பார்கள் என்ற நம்பிக்கையே இல்லை. சட்டென்று உயந்து போனது பாதுகாப்பல்ல என்பதை அறிவேன்.

எனக்குப் பிடிக்காத இன்னொரு அம்சம் மேக்கப். தெலுங்கு படங்களில் மேக்கப் அதிகமாகச் செய்கிறார்கள்.தமிழில் நிலைமை முன்னேறி இருக்கிறது. மலையாளத்தில் அவசியமான அளவிற்கு 'லைட்' ஆகப் போடுகிறார்கள். என்னைப் பொறுத்த வரையில் மேக்கப் போடுவது அனாவசியம்தான்.

நடிப்பை பற்றிய எனது கணிப்பு இதுதான்.திரைப்படங்களில் நடிக நடிகையர் எதையும் சொந்தமாக செய்ய வேண்டியதில்லை. கமர்ஷியல் டைரக்டர்கள் அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அப்படி நடிக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். டைரக்டர் சொல்வதை செய்வதுதான் நடிக - நடிகையரின் பொறுப்பு. ரஜினி கமலைப் போல எனக்கு சினிமா பாரம்பரியம் இல்லை. ரஜினிக்கும் கமலுக்கும் கிடைக்கும் சுதந்திரம் எனக்கும் படங்களில் நடிக்கும் போது கிடைக்கிறது. 

எப்படியும் நடிப்பு எனக்கு ஒரு  வருடத்தில் அலுத்துப் போகும். அப்படியொரு நிலைமை வரும் போது பெயர் சொல்வதாய் எதையாவது செய்ய வேண்டும். அநேகமாக ஒளிப்பதிவைத்தான் தேர்தெடுப்பேன். நடிப்பு எனக்கு தோல்வியாக அமையவில்லை. நடிப்புத் தொழில் எனக்கு என்னைத் திருப்திப்படுத்தவில்லை என்று மட்டும் சொல்வேன்.

ஹிந்திப்படங்களில் சண்டை அதிகம்.  அவைங்களுடன் என்னால் பொருத்தம் பார்க்க முடியாது. மொழியும் தெரியாது. நமக்கு ஏன் அந்த வம்பு?

பிஸ்மி

படம்: சூர்யா

(சினிமா எக்ஸ்பிரஸ்  15.05.84 இதழ்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com