'செக்ஸுங்கறது ட்ரஸ்ல மாத்திரம் இல்ல' -  கே .ஆர்.விஜயா

சாதாரணமா இருக்கறத கொஞ்சம் எக்ஸாஜுரேட் பண்ணிக் காட்டுறதுதான் நடிப்பு 
'செக்ஸுங்கறது ட்ரஸ்ல மாத்திரம் இல்ல' -  கே .ஆர்.விஜயா

தி நகர் ராமன் தெருவில் கம்பீரமாய் வடக்குப் பக்கம் பார்த்திருந்த கே .ஆர்.விஜயாவின் அரண்மனை. உள்ளே நுழைந்ததும் விசிட்டர்ஸ் கம் ஆபிஸ் ரூம். சில  விநாடிகளில் பளீரென்று வரிசைப்பற்கள் மின்ன, கண் நிறையச் சிரிப்பாய் நுழைந்தார் விஜயா.

"இவ்விட ரெண்டு சாய் வேணும்" என்று உள்பக்கம் குரல் கொடுத்து விட்டு, "எக்ஸ்குளுசிவா இண்ட்டர்வியூ வேணுமனு சொன்னீங்க, சரி, முடிஞ்ச வரைக்கும் சொல்ல முயற்சி பண்றேன்" என்றார் விஜயா.

நடிப்பு :

"உங்க நடிப்பை எப்படி வளத்துக்கிறீங்க?

"கண்ணாடி   முன்னாடி நடிக்கிறது, நோ.. நோ..! இதெல்லாம் நான் செஞ்சதில்ல..!நெறைய படம் பாப்பேன். லாங்க்வேஜ் புரியாட்டாலும் படம் பாப்பேன். எப்படியெல்லாம் செய்யக் கூடாதுங்குறதுக்காகவே பாப்பேன்.

நடிப்புன்னா என்ன? என்ன மாதிரியா நடிக்க விரும்புறீங்க?

சாதாரணமா இருக்கறத கொஞ்சம் எக்ஸாஜுரேட் பண்ணிக் காட்டுறதுதான் நடிப்பு  எந்த மாதிரியும் நடிக்கத்  தெரிஞ்சுகிட்டு இருக்கறதுதான் ஒரு நடிகையோட சிறப்பு.

ஒரு நடிகையோட  அடிப்படைத் தகுதி என்னனு தோணுது உங்களுக்கு?

அழகு வேணும்; திறமை வேணும்; கூடவே கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேணும்.

செக்ஸ்

ஆரம்ப காலத்துல முன்னுக்கு  வர நினைக்கிற ஒரு நடிகை ஓரளவு செக்சியா நடிக்கணும்னு கட்டாயமா?

அப்படி ஒன்னும் அவசியமில்லை.

சரி, இது செக்சி, இது வல்கர் னு  எப்படி பிரிச்சு சொல்வீங்க?

அது ரொம்ப கஷ்டம். ரொம்ப துல்லியமான விஷயம். போட்டுக்கிட்டு நடிக்கிறப்ப நமக்கே தெரியும். செக்ஸுங்கறது ட்ரஸ்ல மாத்திரம் இல்ல. ஒவ்வொரு சின்னச் சின்னச் அசைவிலேயும் இ ருக்கு.

டைரக்டர்

டைரக்டர்ங்கிற மனிதர் இப்படிச் செய் என்று ஒரு அபிப்ராயத்தை உங்க மனசில் உருவாக்கும் போது , நீங்கள் எப்படி கிரியேட்டிவ் ஆவீர்கள்? நீங்க டைரக்ட ரோட  ப்ராடக்ட் தானே?அவர் சொல்றபடி செய்ய வேண்டியதுதானே  உங்க வேலை?

இருக்கலாம். டைரக்டர் இப்டி செய்னு சொன்ன உடனே எல்லோராலும் செஞ்சுட முடியுமா? விஷயம் அவரோடதா இருந்தாலும்,கற்பனையோட அத அழகா, வெளிப்படுத்துறது நாங்க தானே?   டைரக்டர்தான் காப்டன்.இருந்தாலும் படைப்பில் எங்க பங்கு ரொம்ப முக்கியம் இல்லையா? அதை எப்படி அலட்சியம் செய்ய முடியும்?

எதிர்கால இலட்சியங்கள் ஏதாவது உண்டா?

லட்சியம்..ம்ம்ம் ..நத்திங்! ஐ ஆம் வெரி ஹேப்பி வித் மை  பேமிலி அண்ட் மை  ஹஸ்பெண்ட்.இதுக்கு மேல  லட்சியம்னு எனக்கு எதுவும் இல்ல. 

சந்திப்பு: உத்தமன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com