அலாதியான குணம் கொண்ட அற்புதமான கலைஞர் வி.கே.ஆர் 

வெண்ணிற ஆடை மூர்த்தி பேசுகிறேன்
 அலாதியான குணம் கொண்ட அற்புதமான கலைஞர் வி.கே.ஆர் 

வி .கே .ஆர்

ஒருவர் சிரிக்காமலேயே ஜோக்கடிக்க முடியுமானால் அவர் வி.கே.ராமசாமியாகத்தான் இருக்க முடியும். அவர் முகம் சீரியஸா இருந்தாலும், நடிப்பில் காமெடி இருக்கும். பேசும் போதே நகைச்சுவையுடன் பேசும் நாக்கு அவருக்கு. புதுப்படம் எடுக்க ஒரு தயாரிப்பாளர் வி.கே.ஆரைத் தேடி செட்டுக்கு வந்தார். 'படத்துக்கு என்ன வாங்கறிங்க?' என்றார்.

"பணம்தான் வாங்குறேன்..பின்ன என்ன பீரோ நாற்காலியா வாங்குறேன்?" என்றாரே பார்க்கலாம்.கூட இருந்தவர்கள் சிரித்து விட்டார்கள்.

"அதில்லைங்க..நான் சின்னப் படமா எடுக்கறேன்" என்றார் தயாரிப்பாளர்.

"8 எம்.எம்மம்மா?" என்றார். அருகிலிருந்த எனக்கு சிரித்து வயிறு புண்ணாகி விட்டது.

வி.கே.ஆருக்கு அறுபது வயதிருக்கும். இருப்பினும் அவர் ஒரு சின்னப் பையனைக் கூட 'சார்' போட்டு மரியாதையாகத்தான் பேசுவார். இது ஒரு அலாதியான குணம். அத்துடன் யாரைப் பற்றியும் புறம் பேசுவதும் கிடையாது. அற்புதமான கலைஞர்.   

மனோரமா

நகைச்சுவை உலகில் ஒரு முடிசூடா மன்னி. எவ்வளவோ நடிகைகள் ஐந்து பத்தாண்டுகளில் காணாமல் போகும் போதும் மனோரமா மட்டும் திரையுலகில் தனது தனித்திறமை காரணமாக காலத்தினால் அழிக்க முடியாத ஒரு நடிகையாத் திகழ்கிறார்.

அவருடன் நடிக்கும் போது கவனித்த ஒரு முக்கிய அம்சம்.

தனது கதாபாத்திரத்தை முதல்நாளிலே தெரிந்து கொள்வார். அதற்கேற்ற மேக் அப், விக்கை அவரே தேர்வு செய்து கொண்டு விடுவார். ஒரு புதுமுகத்துக்கு உள்ள ஆர்வத்தினை  போல இன்னும் சிறப்பாக நடிப்பார். நடிப்பில் தனக்கு பூரணத்துவம் ஏற்படும் வரை விட மாட்டார். சில சமயங்களில் 'ஷாட் ஓ.கே' என்றாலும் பரவாயில்லை சார்..எனக்கு திருப்தியாயில்லை...இன்னொரு ஷாட் எடுங்க என்பார். இந்தியாவிலே இப்படி ஒரு அற்புத நடிகையை பார்க்க முடியாது.   

மண்ணை சவுரிராஜன்

(சினிமா எக்ஸ்பிரஸ் 15.03.84 இதழ்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com