எவனும் எங்க வம்புக்கு வர்றதில்லை.

காரைக்காலைச் சேர்ந்த அருணாச்சலம் - சரோஜா தம்பதியின் மகனாகப் பிறந்து, திருமலை நாயக்கன் பட்டியில் ஆரம்பப் பள்ளியில் சேர்ந்து, குடும்பத் சூழ்நிலை காரணமாக
எவனும் எங்க வம்புக்கு வர்றதில்லை.

காரைக்காலைச் சேர்ந்த அருணாச்சலம் - சரோஜா தம்பதியின் மகனாகப் பிறந்து, திருமலை நாயக்கன் பட்டியில் ஆரம்பப் பள்ளியில் சேர்ந்து, குடும்பத் சூழ்நிலை காரணமாக தொடர முடியாமல் போய், ஏழாவது வயதிலேயே மேடையேறி விட்டார் தங்கவேலு.

"சதி லீலாவதி" படத்தின் மூலம் திரை நடிகராக அறிமுகமாகி, "சிங்காரி" படத்தின் மூலமா நிரந்தர ஹாஸ்ய நடிகரான தங்கவேலு இன்று நகைச்சுவை உலகின் முடிசூடா மனனராகத் திகழ்பவர். அவரை 'டனால் '   என்று சந்தித்த போது :

:'நீங்கள் எப்படி சினிமாவிற்கு வந்தீர்ர்கள்?"

கொஞ்ச தூரம் நடந்து வந்து பிறகு பஸ் ஏறி சினிமாவிற்கு வந்தேன்.முதல் படம் "சதி லீலாவதி "   

"உங்கள் பெயருடன் 'டணால்' என்ற வார்த்தை எப்படி ஒட்டிக் கொண்டது?"

"ஏங்க ,நானா ஒட்டிக் கொண்டேன்?  'சுகம் எங்கே' என்ற படத்தில் நான் பேசும் வசனத்தில் 'டணால்' என்ற வார்த்தை அடிக்கடி வரும். அதை பார்த்து ரசித்த ரசிகர்கள் அந்த வார்த்தையை என் பெயருக்கு முன்னால் ஒட்டி விட்டார்கள். அன்னிக்கு ஒட்டியது காய்ந்து போய், இறுக்கப் பிடித்துக் கொண்டது.

"இன்றைய படங்களில் நகைச்சுவை நடிகர்களுக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்கப்படுவதில்லையே  ஏன்?"

இன்று பலரின் நடிப்பே சிரிக்கிற மாதிரிதானே அமைந்திருக்கிறது.அதனால் தனியாக காமெடி பாத்திரம் தேவையில்லை என்று விட்டு விட்டார்களோ என்னமோ?

யாருடைய ஹாஸ்ய நடிப்பு உங்களுக்கு பிடிக்கும்?

கமலஹாசன்

முன்பு போல் இப்போதெல்லாம் காமெடியன் நிலைத்து நிற்பதில்லையே?

காமெடியனா  நிக்கனும்னா அதுக்கு நிறைய சக்தி (திறமை) வேணுமே?

பிற மொழி நடிகர்களை தமிழ் திரைப்படங்களில் அதிகமாக நடிக்கச் செய்கிறார்களே? அப்படி என்றால் தமிழில் திறமை மிக்கோர் இல்லை என்று அர்த்தமா?

நம்மிடையே நடிகர் பஞ்சமா இருக்கு? இல்லவே இல்லை.இதற்குபலகாரணங்கள் உண்டு. நம்மிடையே உள்ள திறமையான நடிகர்களை தக்கபடி பயன்படுத்த இன்றைய இயக்குனர்களில் பலருக்கு திறமை போதாது.

பிற மொழி நடிகர்கள் தமிழ் படக் காமெடியனாக வரவிலையே ஏன்?

நல்லா கேட்டிங்க..காமெடியன் திறமையும் சமயோசித புத்தியும் கொண்டவனாக இருக்க வேண்டும். இது அவர்களுக்கு நன்கு தெரியும். அதனாலேதான் எவனும் எங்க வம்புக்கு வர்றதில்லை.

இவ்வளவு அனுபவம் கொண்ட நீங்கள் படம் தயாரிக்கவோ, டைரக்ட் செய்யவோ விரும்பியதுண்டா?

கொஞ்சம் என்னைப் பிடிச்சுக்கோங்கோ...உடம்பெல்லாம் பதறுது.தயாரிப்பியா..டைரக்ட் செய்வியா கேட்டு இனிமே இப்படியெல்லாம் பயமுறுத்தாதிங்க..குளிர் ஜூரமே வந்துடும் போல இருக்கு..!   

பத்மநாபன்

(சினிமா எக்ஸ்பிரஸ்  01.07.82 இதழ்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com