ஆராய்ச்சிமணி

டிக்கெட் கவுன்ட்டர் தேவை!

முகப்பேர் மேற்கு பேருந்து நிலையத்தில் மாதாந்திர சீசன் டிக்கெட், மூத்த குடிமகன் டிக்கெட் கொடுக்க கவுன்ட்டர்களை ஏற்படுத்த வேண்டும்.

13-03-2017

தடையின்றி ரேஷன் பொருள்கள்!

மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சி ரேஷன் கடைகளில் 10-ஆம் தேதிக்கு பிறகு ஒரு சில பொருள்களே கையிருப்பு உள்ளது என்று கூறுகின்றனர்.

13-03-2017

ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

கிண்டி ரயில் நிலையத்தில் இருந்து ரேஸ்கோர்ஸ் செல்லும் வழியில் பல கடைகள் ஆக்கிரமித்து வைத்துள்ளதால் பயணிகள் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றனர்.

13-03-2017

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

அயன்புரம் 97-ஆவது வட்டம் முத்தம்மன் கோயில் தெரு மற்றும் புதியஆவடி சாலை இடையே உள்ள சென்னை குடிநீர் வாரியத்துக்குச் சொந்தமான இடத்தில் அதிக அளவு கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளன.

13-03-2017

பேருந்து நிற்குமா?

சென்னை சைதாப்பேட்டை சின்னமலை கோர்ட் அருகே பயணியர் நிழற்குடை உள்ளது. இந்த வழியாகச் செல்லும் பேருந்துகள் பயணியர் நிழற்குடை அருகே நிற்காமல் முன்பாகவே நின்றுவிடுகின்றன

13-03-2017

சுகாதாரச் சீர்கேடு

சென்னையை அடுத்த பூந்தமல்லி ஜேம்ஸ் நகர் பிரதான சாலையில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகம், குடியிருப்புகள் ஆகியவை நிறைந்த பகுதியில் நகராட்சி சார்பில் குப்பையைக் கொட்டி மூடப்பட்ட கிணறு

06-03-2017

தினமணிக்கும் நன்றி

கடந்த 20-2-2017-ஆம் தேதி வெளியான ஆராய்ச்சி மணியில் ""ஆபத்தான நிலையில் மின்கம்பம்'' என்ற தலைப்பில் எனது கோரிக்கை வெளியானது.

06-03-2017

கோயில் குளத்தில் குப்பை!

வில்லிவாக்கம் பாலியம்மன் கோயில் தெருவில் பெருமாள் கோயில் குளத்தின் ஒரு பகுதி உள்ளது. இக்குளத்தின் பிரதான படிக்கட்டின் வழியே வில்லிவாக்கம் சுற்றுப்புறப் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கலந்து குளம் மாசுபட்டுள்ளது.

06-03-2017

மின் கம்பங்கள் சீரமைக்கப்படுமா?

சென்னை மாநகராட்சி மண்டலம் - 3 வட்டம் 28-இல் படவேட்டம்மன் கோயில் தெரு, மாதவரம் பால் பண்ணை பகுதி தெரு விளக்குகள் வர்தா புயலில் பாதிக்கப்பட்டு சாய்ந்தும் விளக்கு இல்லாமலும் எரியாமலும் உள்ளன.

06-03-2017

நீண்ட நாள்களாக எரியாத தெருவிளக்குகள்!

பல்லாவரம் வட்டம் திருநீர்மலை பேரூராட்சிக்கு உள்பட்ட தமிழ்நாடு ஹவுசிங் போர்டு காலனியில் உள்ள பல தெருவிளக்குகள் நீண்ட நாள்களாக எரிவதில்லை.

06-03-2017

குடிநீர் வடிகால் வாரியம் விளக்கம்

மாதவரம் மண்டலம் பகுதி 3-இல் உள்ள சின்ன சேக்காடு பல்ஜிபாளையத்திலுள்ள 14 தெருக்களில் குடிநீர் கட்டமைப்பு வசதிகள் நடைபெற்று வருகின்றன.

06-03-2017

நெரிசலில் சிக்கித் தவிக்கும் மாற்றுத் திறனாளிகள்

சென்னை ரசாக் கார்டன் சாலையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் அண்ணாநகர், அரும்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை ரூ.1000 வீதம் மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்படுகிறது.

06-03-2017

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை