மழை நீர் போல: கே. நடராஜன்

வறண்டு கிடக்கும் பூமி ...வானம் திறக்குமா கண் ?மேலும் கீழும் பார்ப்பது உழவன் மட்டுமல்ல இன்று !அடுக்கு மாடி கட்டிடக் குவியல் கூட்டில் குடி இருக்கும் நகரத்துப் "பறவைகளும்" மழை தேடி வானிலை அறிக்கையை காலையும் மாலையும் அலசும் அவலம் இன்று !மழை நீரை முத்தமிட துடிக்கும்  வறண்ட பூமி நனையுது மழை நீர் போல பெருகி வரும் உழவன் அவன் கண்ணீரில் !குடிக்க நீர் இன்றி தவிக்கும் அடுக்கு மாடி "பறவைகள்"வழி மேல் விழி வைத்து காத்திருக்குது  தினமும் ஒரு லாரி தண்ணீருக்கு ! தண்ணீரும் பணமாக மாறும் காலம் இது ..மழை நீர் சேமிப்பின் மதிப்பு உணராத மனிதன் கொடுக்கிறான் நீருக்கு ஒரு விலை இன்று !மழை வெள்ளம் வரும் நேரம் "இது என்ன பேய் மழை" என்று அலறிய மனிதன் குரல் கேட்டு வானமும் மனம் உடைந்து "கண்ணீர் " விடவும் மறந்து போனதோ ?தினம் தினம் தண்ணீர் தண்ணீர்  என்று மனிதன்  கண்ணீர் விட்டு என்ன பயன் இன்று ?மாற வேண்டும்  மனிதன்... மாற்றி யோசிக்கவும் வேண்டும் ...வானமும் மகிழ்ந்து  தன் ஆனந்தக் கண்ணீரால்  நனைக்க வேண்டும் இந்த பூமியை !மனிதனுக்கும் புரிய வேண்டும்  எந்த நீர் ஆனாலும்  மழை நீர் போல ஆகுமா  என்று !

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com