என்ன தவம் செய்தேன்: பொன். குமார்

எந்தன் தாய்க்கும்
எந்தன் தந்தைக்கும் 
மகனாக பிறந்திட
என்ன தவம் செய்தேன்?

நல்ல மனைவியை
நான் பெற்றிட
என்ன தவம் செய்தேன்?

நல்ல பிள்ளைகளை
நான் பெற்றிட
என்ன தவம் செய்தேன்?

நல்ல நண்பர்களை
நான் பெற்றிட
என்ன தவம் செய்தேன்.?

நல்ல வாழ்க்கையை
நான் பெற்றிட
என்ன தவம் செய்தேன்?

ஒரு மோசமான தலைவனை
ஒரு மோசமான ஆட்சியை
நான் பெற்றிட
என்ன பாவம் செய்தேன்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com