அரியாசனம் :  ஆபிரகாம் வேளாங்கண்ணி

காக்கையின் கூட்டிலே
குயில்கள் கூட்டம்  கூடி
காக்கையை விரட்டி 
கூட்டை கைப்பற்றியே
என் கூடெனக் கூறியதே 
அது குயிலின் அரியாசனம்
என்பின் ஞாயமுண்டோ

அப்போதைக்கு விரலை
கொடுக்கப்பட்டிருப்பதே 
இப்போதைக்கு உரலை
இழுக்கும் அவலங்களும் 
கைப்பற்றிட அரியாசனம்

எப்போதைக்கும் விரும்பாத 
அரியாசனம்  அமர்ந்திட
இப்போதைக்கு விரும்பும்
உள்நோக்கம் என்னவானது 
மக்களே தீர்மானிப்பர்

குளத்தில் வாழும் தவளை
தன்வாயால் தானேகெடும்
அரியாசனமா அமரும்?
காணாமல் போகலாம் 
காலம் கதை கூறலாம் 

சிலர் சிலரை பழித்தீர்க்க
தீயோரை கைக்கோர்க்க
தனக்கே தலை வலியாகி
உயிரையே துறப்பாரோ
அரியாசனம் இழப்பாரோ

வச்சி வையுங்கள் என் பங்கை 
வனவாசம் முடிந்தப்பின்பு வந்து

பெறும் வரைக்கும் அந்த
நிலை காணப்படுகிறது
அரியாசனம் அலங்கரிக்க  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com