மல்லுக்கட்டும் ஜல்லிக்கட்டு:  கவிஞர் "இளவல்"ஹரிஹரன்,

துள்ளியோடும் காளையினை அடக்கு கின்ற      தோள்கொண்ட இளைஞர்க்கே மாலை சூடும்உள்ளமதைக் கொண்டபெண்மை யிருந்த நாட்டில்      உண்மையிதை மறைத்துவைத்து மாட்டின் மீதுகள்ளமுள்ள அபிமானம் வைத்து, தொன்மை      காட்டுகின்ற பண்பாட்டு விளையாட் டைநம்கொள்ளைகொண்ட நெஞ்சத்து ஜல்லிக் கட்டை      கெடுத்தொழிக்கும் அரசியலைச் செய்கின் றாரே...ஏற்போமா இவ்விழிவை! உயிர்கொ டுத்தே       எப்பாடு பட்டேனும் நடத்திக் காட்டிச்சேர்ப்போமே பெருமையினை! தமிழ கத்தில்      செயல்பாட்டில் கொணர்வோமே! அன்றி என்றும்தோற்போமா நீதிமன்றத் தீர்ப்பா லேதான்!      தொடர்வோமே தங்குதடை யேது மின்றி!பார்ப்போமே ஒருகைதான் பங்க மின்றிப்       படைப்போமே புதுநெறியை ஒன்று சேர்ந்தே!விளையாட்டு வினையாகிப் போகு மென்ற       விவரமிலா வீணர்தம் பேச்சைக் கேட்டுவிளையாட்டைத் தடுப்பதுதான் முறையோ? பாரில்        விளையாட்டால் உயிர்வதைகள் தடுப்ப தற்குநிலையான விதிமுறைகள் வகுத்தால் என்ன!        நெறிகளுக்குட் பட்டேநம் ஜல்லிக் கட்டுவிளையாட்டை வீரவிளை யாட்டாய் இங்கே         வெற்றியுடன் நடத்திடுவோம் வாரீர் முன்னே!                             

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com