கல்லறைப் பூவின் கண்ணீர் துளி: சீர்காழி .ஆர் .சீதாராமன் 

பல முகங்கள் கொண்டவை
ஆக வலம் வருகிறது பூக்கள்
இடத்துக்கு இடம் மாறுபடும்
பெருமையும் கொள்கிறது

நாட்டைக்  காத்த ராணுவ
வீரனின் கல்லறை மீது
விழுந்த பூக்கள் விட்டது
வீர கம்பீர கண்ணீர் துளி "

இளம்தளிர் குழந்தைகள்
கல்லறை மீது விழுந்த
பூக்கள் விட்டது தணியாத
தாக வேதனைக் கண்ணீர் துளி"

சுனாமி , இயற்கை சீற்றம்,
பேரழிவில் சிக்கி  உறைந்த
கல்லறை மீது விழுந்த பூவின்
கண்ணீர் துளி வாழ்வின்
ரகசியம் அறியா மர்மத்துளி

சாதனை நாயகன் , நாயகி
கல்லறை மீது விழுந்த பூவின்
கண்ணீர் துளி   சாதித்த
பெருமையில் மூழ்கியது 

கல்லறைப் பூவின்கண்ணீர் துளி
பற்பல வேதனை சாதனை
சோகம் கம்பீரம் என்று தன்னை  
சுய பரிசோதனை செய்து
கொள்ளும் அரிய பிறவி 

தலைமுறை தாண்டியவன்
கல்லறையில் பூவின்அனுபவ
கண்ணீர் துளியாகவும் ஜொலிப்
போடும்  மிளிர்கிறது

அற்ப ஆயுள் கொண்டவன்
கல்லறையில்    கருகிய    
மொட்டின் பெருகிய
கண்ணீர்  துளியாகவும் ,
வலம் வருவது 

பன்முகம் காட்டி கல்லறைப்
பூவின் கண்ணீர் துளி ஏக்கமா
ஆனந்தக் கண்ணீரா என்று
புதிர் போடுகிறது இன்றும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com