மறு ஜென்மம்: கவிஞர் கே. அசோகன்

கூட்டிடை பிரிந்துதான் உயிர் பறந்தால்
   கொண்டிடும் மறுஜென்ம என்ன வென
காட்டிடும் அக்கறையை புறந் தள்ளி
   கணநேரம் மகிழ்ச்சியில் காணு மின்பம்
போட்டிதான் போட்டிடுமோ மறு ஜென்ம்ம்!
   பொருள்தந்து, வள்ளலாய் மாறி விடின்
பூமியிலே மறுஜென்ம பலன்கள் தானே!
   போற்றித்தான் மகிழ்வாரே புண்ணிய மாய்!

அன்னையும் ஐயிரு திங்கள் வரை
   அடிவயிற்றில் சுமந்து பெற்ற பிள்ளை
முன்தலை உச்சிதனை முகர்ந்து தான்
   முத்தமீந்து மகிழ்வாளே மறுஜென்ம  மாய்!
கன்னல் முத்தம்  தருவதாய் சொல்லி சென்ற
   காதலியும் முத்தமிடின் மறுஜென்ம மாமே!
தன்னலத்தை மறந்தேதான் உழைத்து தேயும்
   தந்தையின் புகழுயர மறுஜென்ம்ம் தானே!

தவவாழ்வு வாழ்ந்திருக்கும் துறவி கட்கு
   துளிநேரம் தமைமறந்து நிலைத்தி ருந்தால்
தவவாழ்வின் மறுஜென்ம மென்றே தான்
   தெளிந்திடுவார் இறைவனின் சித்த மென்றே!
விவசாயம் செய்கின்ற உழவர் களெலாம்
   விண்மழையின் வரவுக்காய் ஏங்கி நிற்க
தவறாது மும்மாரி பொழிந்து வரின்
   தலைமேலே கும்பிட்டு மறுஜென்ம மென்பாரே!
                
பிள்ளைகள் தேர்வெழுதி முடித்த பின்னே
   பாடங்கள் அத்துணையும் தேர்ச்சி பெற்றால்
உள்ளத்தில் மகிழ்ச்சிதான் பொங்கி வழிந்து
   உயரவே குதித்துதான் மறுஜென்ம மென்பாரே                    
அள்ள அள்ள குறையாத செல்வம் வந்தால்
   அடுத்த ஜென்மம் எவரேனும் வேண்டுவரோ?
கள்ளமில்லா குழந்தையின் சிரிப்பை கண்டால்
   காத்திருக்கும் மறுஜென்மம் போகும்  கரைந்தே     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com