மறு ஜென்மம்: சசி எழில்மணி

முற்றிய நெற்கதிர்
தன்தலை குனிந்து
விளைச்சல் பெருகி
உழைத்தவனை தலை
நிமிர்ச்சி செய்தால்
உழவனுக்கு மறுஜென்மம்
 
பத்து மாதம் தவமிருந்து
பத்தியத்தைக் கடைப்பிடித்து
இன்னல்களைத் தாங்கிக்கொண்டு
வலியை சுகமென்று
நினைத்துக்கொண்டு
அகம் மகிழ்ந்துக் கிடப்பாள்
பெண்ணுக்கு மறுஜென்மம்

நல்ல நூல்களை தேடிப்பிடித்து
நல்ல கருத்துக்களை
மனதில் நிறுத்தி
அதன் வழி நடந்து
கற்றதை கற்பித்து
மற்றவரை நெறிப்படுத்த
படித்தவனுக்கு மறுஜென்மம்

மனிதம் மதித்து
உதவிகள் செய்து
நல்வழி நடப்போர்க்கு
விடியும் பொழுது
புதிதாய்த் தோன்றும்
அறம் அவரைக் காத்திடும்
நாளும் மறுஜென்மமே

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com