விடுதலை : சீர்காழி .ஆர் .சீதாராமன்

காலம்  கடந்த
முதிர்கன்னி  கேட்டாள்
திருமண       விடுதலை ,
   
சிட்டுக்குருவி   கேட்டது
செல்போன்        டவர்
விடுதலை ,

மாணவன்    கேட்டான்
சுமக்கும்       புத்தக
மூட்டைக்கு  விடுதலை ,

அடைபட்ட   கூண்டுக்
கிளி            கேட்டது
பறக்க           விடுதலை ,

சர்வாதிகாரம்    ஆணவப்
பேச்சு          அடக்குமுறை
அரசியல்          மக்கள்
முழக்கம்         விடுதலை ,

அடிமாடுகள்   ,   கோவில்
கெடா    ,        வேண்டியது
உயிர்பலி        விடுதலை,

வானமும்       பூமியும்
கேட்டது      மீளா
உழைப்புக்கு   விடுதலை ,

ஆற்றுப்பாதை   கேட்டது
மணல்      கொள்ளைக்கு
விடுதலை "

வளிமண்டலம்  கேட்டது
மாசுபடும்         சுற்று
சூழலுக்கு       விடுதலை ,
   
ஆண்    ஆதிக்க
பிடியில்  இருந்து
பெண்கள்  கேட்டது
விடுதலை ,

ஆதரவு     இல்லா
ஆரசுக்கு    என்றும்
இல்லை     விடுதலை ,

விடுதலை    என்ற
எதிர்கால     தேடலை
நோக்கியே    உலகமயப்
பயணம் "

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com