விடுதலை: ஆபிரகாம் வேளாங்கண்ணி

நடு நிலையல்லாது
படு கொலை ஜனநாயகமதை
உறங்கவிடாது
படும் கவலை விடுதலை நாள்
எந்நாளோ அந்நாளே பூரண நிம்மதி

வெள்ளை காகிதங்கள் அது
வெள்ளையாய் இருக்கும் வரை
மதிப்பு  இல்லையே

அதுவே பணமாக மாறினால்
மடித்தாலும் கசக்கினாலும்
அழுக்கு பட்டாலும்
அதே மரியாதை
குறைவதில்லை

கிலுகிலுப்பை ஆட்டுவோர்
பின்னே பறந்தோடும்
சிசுக்கள் கூட்டம்

கிளுகிளுப்பு ஊட்டுவோர்
பின்னே பறந்தோடும்  
பதவியாசை கூட்டம்

கலகலப்பு மாய்ந்து
வெகுநாட்கள் ஆயிற்று
நாட்டிலே வீட்டிலும்

சலசலப்பு மூலைக்கு மூலை
விடிவு ஒன்று வாராதோ
விடுதலை எனும் பெயராலே

விற்கப் படுகின்ற
ஓட்டு உரிமையை
வாங்கியோர் நடத்தும்
அராஜகங்கள்

நீரு கொடுக்கின்ற ஆறும்
சோறு கொடுக்கின்ற நிலம்
வெடித்து வீணகுமோ
ஊரும் செழியாது தேரும்
ஊராது போகுமோ

எங்கும் எதிலும் கண்மூடித்
தன போராட்டங்களால்
அன்றாடம் காய்ச்சிகளுக்கு
போனது அன்றைய ஜீவனம்

உன் செல்வாக்கென்ன
என் செல்வாக்கென்ன
வென்று ஒருவர் மீது
ஒருவர் சாடல்கள்

விடிவு ஒன்று பிறக்காதோ
விடுதலை பெயர்ச்சூடி
சுதந்திரமாய் வாழ்ந்திட

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com