வீரமங்கை: அழகூர். அருண். ஞானசேகரன்.

இரும்பெனத்  தக்கதொரு  இதயமதைக்  கொண்டாள்           இன்னாட்டின்  நலனுக்கே  தன்னுயிரை  ஈந்தாள் !பெரும்பகுதி  வாழ்வெல்லாம்  பொதுவாழ்வு  ஆகி            பெரும்பதவி  தனைக்காணும்  பேராண்மை  பெற்றாள்!அரும்பெரும்  தியாகமதே  அன்னவளின்  வாழ்வு,            அகிலமதே  போற்றிட்ட  உயர்வான  ஒன்று !திரும்பாதோ  அவளாட்சி  இன்னாட்டில்  மீண்டும்,            திறனில்லா  ஆட்சியெலாம்  ஒழியத்தான்  வேண்டும்!இன்னாடு  கண்டிட்ட  வீரமங்கை  ஆனாள்            இந்திரா  காந்தியெனும்  மங்கையவள்  அன்று!பொன்னாடு  என்றநிலை  தனைக்கண்ட  தெல்லாம்            புகழ்கண்ட  அன்னவளின்  திறனதால்  தானாம்!அன்னவளின்  மைந்தனவன்  ராஜீவின்  தீர்க்கம்            ஆக்கமதைத்  தந்ததனை  அறியாதார்  பேதை!என்னாளும்  அவர்கள்தமை  மறவா  திருப்பதே            இனிதான  நம்கடமை  என்றுணரத்  தகுமாம்!உணவுக்குக்  கையேந்தி  நின்றநிலை  மாறி            உபரியென  நாமின்றுக்  காண்கின்ற  தெல்லாம்கணக்காக  அவளிட்டத்  திட்டங்க  ளாலே,            கருத்திலிதைக்  கொள்ளாதார்  பேதையர்கள்  தானாம்!பிணக்குற்ற  சீக்கியர்கள்  தனிநாடு  வேண்டி            பிரிவினைப்  போக்குதனை  கொண்டிட்டப்  போது,அணங்கவள்  கொண்டிட்ட  தீர்க்கமது  தானே            அடக்கியே  வென்றதும் ,  அதனைநினை  மனமே!கடமைதனில்  உயிர்விட்டக்  கருத்துடைய  மங்கை,            காலத்தால்  அழியாநற்  புகழ்கொண்ட நங்கை!மடமைதனைக்  கொண்டிட்டோர்  அன்னவளைக்  கொன்றார்,            மங்காதப்  பழிதன்னை  தனதாக்கிக்  கொண்டார்!திடமனதும்  தைரியமும்  தீர்க்கமதும்  கொண்ட            திருமதி  இந்திரா  காந்தியால்  தானேஉடமையெனக்  கொண்டது  செழிப்புதனை  நாடும்            உணராதார்  பேதைகளே  என்றாவார்  தானே!வங்கிகள்  தன்னையவள்  அரசுடமை  ஆக்கி            வகைசெய்தாள்  ஏழைகளும்  கடன்பெற்று  உய்ய!சிங்கமெனத்  திகழ்ந்திட்டாள்  ஆண்களவர்  நடுவே,            சிறுநரிக்  கூட்டமென  ஆகினார்  பிறரும் !தங்கமகள்  அன்னவளின்  திறனதால்  தானே            தக்கநல்  உயர்வுதனை  நாடுகண்ட  தெல்லாம்!மங்காது  அவள்கண்டப்  புகழதுவும்  உலகில்,            மதியதுவும்  ஆதவனும்  விண்ணிலுள்ள  வரையில் !                 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com