நிழல் தேடி : ஆபிரகாம் வேளாங்கண்ணி

நிழல் தேடி நாம் தான் 
பயணிக்க வேண்டும் என்பது 
வாழ்வின் நியதி

நம்மைத் தேடி 
உயிர் நிழல்கள் வருவதுண்டு 
பலப்பல ரூபத்திலே

அன்னை நிழலுக்குமாக
தந்தை நிழலுக்குமாக
ஏங்கித்தவிக்கும் மாசற்ற 
பிள்ளைகள் ஆயிரம்

அன்னை தந்தை என்று 
இருந்தது நிஜமா பொய்யா  
குழந்தைகள் விக்கல்கள்

சில வேற்று " நிழல் தேடி"  
மாற்று நிழல் தேடி வந்து 
அமைகிறது  சிலரோடு 

அதையே ஏற்றுக்கொண்டு 
போகும் நிலை கிடைக்கும்
பாடத்தை கற்றுக்கொண்டு

துக்கம் இருக்கிறது உள்ளத்தில் பலருக்கு
ஆனாலும்
சொர்க்கம் தெரிகிறது
முகத்திலே சிலருக்கு

நிழல்களை காத்து நிருத்திட
ஆதவன் மறந்துவிட்டால்
அந்த தருணம் பார்த்து
காலன் அவன் நிழல்களை
மறைத்தே விடுவான்

உள்ளத்தால் நிழல் தேடி
பயனில்லை; அறிவால்
நிழல் தேடி பயனில்லை

ஆன்மாவால் "நிழல் தேடி" 
ஆண்டவனே நிழலாய் துணை நின்றான்

இனியொரு  பயமும் இல்லை; 
இச்சகத்தினை வென்றிடுவேன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com