நிழல் தேடி:  கவிஞர் "இளவல்" ஹரிஹரன்

சாலையிலே மரங்களெல்லாம் வெட்டி விட்டு       சந்ததியைக் காப்பதற்கு முயற்சி செய்வார்.பாலைவனம் போலபூமி ஆக்கி விட்டு       பாழாகிப் போனவாழ்வை சலித்துக் கொள்வார்.சோலைவன மாயிருந்த பூமி யெங்கும்        செயற்கையான வற்றையெல்லாம் பூசி விட்டுஓலமிடும் வாழ்வதனைப் பரிசாய்ப் பெற்றார்.         ஓசோனில் ஓட்டையிடும் வித்தை செய்தார்.கால்கடுக்கும் வெயிலிலிருந்து காத்துக் கொள்ள         கருத்தநிழல் தேடுகின்ற காட்சி கண்டால்பால்மாறிப் பேசிவிடத் தானே தோன்றும்          பார்க்குமிட மரமெல்லாம் வெட்டி விட்டுசூல்கொள்ளும் கருமேகக் கருவ றுத்தார்          சூடுகண்ட பூனையென ஆகி விட்டார்நாளெல்லாம் நிழல்தேடித் தவித்துப் போவார்.          நாம்செய்த பாவந்தான் என்ன சொல்ல!முதியோரின் நிழல்தேடி இளைஞர் சென்றால்         முன்னேற்றம் ஏற்படுதல் காண லாமேபுதியதொரு சமுதாயம் தோன்றும் நல்ல         பொன்னுலக அனுபவத்தை உணர லாமேஅதிசயமாய்த் தெரியமந்த நிழலில் தானே          அடுத்தடுத்த தலைமுறைகள் தழைக்கின் றாரேபுதிதல்ல நாம்சொல்லும் இக்க ருத்து..          புராணத்தில் நிழலாகச் சொன்ன வையே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com