நிழல் தேடி:  கு.முருகேசன்

­­­­­­தன்மேல்  தாக்கும் ஒளிக்கற்றையை
நிழலாய் மாற்றும் மரம் போல
தன்மேல் தாக்கும் துன்பமெல்லாம்
தன்னை சார்ந்தவரை தாக்காமல்
காக்கும் நபரெல்லாம் நிழல் ஆவார்!

வாழ்க்கைப் பயணத்தில்
குற்றவாளி தேடுவது பெயில்!
குளித்தவன் தேடுவது வெயில்!  
களைத்தவன் தேடுவது நிழல்!

சினிமாவும் நிழல்தான்!
இலட்சியம் அடைய முன்மாதிரிகளை
நிழலில் தேடாதீர்கள்!
நிஜத்தில் தேடுங்கள்!

மரம் தன் காலடியில் தவிப்போர்க்கு
நிழலைத் தரும்!
கடல் அலையில் தவிப்போர்க்கு
ஓடம் தரும்!

மனிதன் மரத்தின் நிழலில் இருப்பது
களைப்பாற்றும்!
மனிதன்
சக மனிதனின் நிழலில் இருப்பது
காப்பாற்றும்!

முருகனுக்கு சுட்ட பழம் தந்தது
நாவல் மரம்தான் - அதனால்
ஒளவையின் அறிவை அறிந்தான்!
புத்தனுக்கு ஞானம் தந்தது
அரச மரம்தான் - அதனால்
அரசையே மறந்தான்!

ஆதரவற்றோர் தேடுவது
அன்பெனும் நிழல்!
அன்பாய் வளர்த்த பெற்றோர்
முதுமையில் தேடுவதும் பிள்ளையின்
அன்பெனும் நிழல்!

பெற்றோர் நிழலில் வளர்ந்தவன் -பெற்றோர்க்கு
நிழலாய் இருப்பது மகிழ்ச்சி!
பெற்றோர் நிழலில் வளர்ந்தவன்
பெற்றோரை வெறுப்பது அதிர்ச்சி!

மனிதா மரமாக வாழதே
வெட்டப்படுவாய்!
மரம் போல்  வாழ்ந்தால் வாழ்த்தப்படுவாய்!
மரம் போல்  வாழ்ந்தால் - மற்றவர்க்கு
நிழலாவாய்! மலராவாய்!
காயாவாய்! கனியாவாய்!

மனிதன் இல்லாமல் மரங்கள் வாழலாம்
மரங்கள் இல்லாமல் மனிதன் வாழலாமா?
மரம்! மனிதனுக்கு நிழல்கொடுக்கும்!
காய் கொடுக்கும்! கனி கொடுக்கும்!
புயலுக்கு
தன் உயிரையே கொடுக்கும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com