ஆறோடும்  நீரோடும் : கே.நடராஜன் 

நீரோட்டம் இல்லையென்றால் ஆறோட்டம் ஏது ?
நீரில்லா ஆற்றில்  மணல் நிரம்பி  இருக்க ..இன்று 
மணல் அள்ள ஓடும் வண்டிகள்  ஓட்டம் எந்த 
ஒரு ஆற்றின் நீர் ஓட்டத்தையும் தள்ளும் பின்னுக்கு !

நீரோடும் ஆறே  ஒரு பாலைவனம் ஆகும் நேரம் 
சோலைவனம் எங்கே இருக்கும் நாட்டுக்குள் ?
இன்று நிழல் தேடி ஓடும் நாம்   குடி நீர் தேடி 
அலையவும் வேண்டுமா ? சிந்திக்க வேண்டும் நாம் !

இணைய தளம் மூலம் உலகத்தின் ஒரு ஒரு 
மூலையையும் இணைத்து விட்டோம் !
இணைய தளம் மூலம் இதயங்கள் பல
இணையவும் வழி காட்டி  விட்டோம் !

கணினி அறிவியல் கையில் எடுத்து 
விண்வெளியிலும்  நம் வெற்றிக் கணக்கை 
துவக்கி விட்டோம் !  நதி நீர் 
இணைப்பை மட்டும் நமக்கு எட்டாக் கனி 
என்று விட்டு விடுவது என்ன நியாயம் ?

மண்ணையும்  விண்ணையும் இணைத்த 
நாம் நம் நாட்டு நதி நீரை இணைக்க 
முடியாதா என்ன ?  "உன்னால் முடியும் தம்பி "
என்ற சொல்லின் பின்னால் இருக்கும் 
நம்பிக்கை ஒரு வேத வாக்கு அல்லவா !

வெற்று வாக்கு இல்லையே அந்த மந்திர வாக்கு !  
மாய மந்திரம் எதுவும் செய்ய வேண்டாம் நாம் ! ஒரு வழி 
வகுப்போம் நதி நீர் இணைப்புக்கு இன்றே 
இப்பொழுதே ! இமயம் முதல் குமரி வரை 
சாலைகளை  இணைத்த நமக்கு சாலையோரம் 
சீறிப்பாயும் நதிகளையும் இணைப்பது  ஏன் 
முடியாத இலக்கு இன்று வரை ?  

சற்றே சிந்தித்து எதிர்கொள்ள வேண்டும் 
இந்த சவாலையும் ! முயன்றால் முடியாதது 
என்று ஒன்று உண்டா ?
இணைவோம் நாம் ஒன்றாக ...இணைப்போம் 
நம் நதி யாவும்  !

இணையப்போவது நதிகள்  மட்டும் அல்ல !
இந்திய மக்களின் தேசிய ஒருமைப்பாட்டின் 
நீரோட்டமும் சேர்ந்துதான்!
வற்றாமல்  தொடரட்டும் நீரோட்டம் ஒவ்வொரு
ஆற்றிலும் !

இது ஜீவ நதி அது ஜீவ நதி என்னும் 
பேதம் இல்லாமல் நீரோடும் ஒரு ஒரு ஆறும் 
ஒரு ஜீவ நதியாக மாறட்டும் !

ஆறு செல்லும் 
வழி எல்லாம் பூமி செழிக்கட்டும் ! நதி இணைப்பு 
நம் நாட்டு மக்கள் அனைவரையும் ஓர் அணியில்  
இணைக்கும் அன்பு  பாலமாகவும்  அமையட்டும் !

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com