ஆறோடும் நீரோடும்; -வேம்பார் மு.க.இப்ராஹிம்

ஆறோடும் நீரோடும் இடந்தான் 
நாகரிகத்திடன்  உறைவிடம்
அதுதான்
மனிதயினத்தின் பிறப்பிடம்..

உண்டான் உறங்கினான்
உயிர் வாழவும் கற்றுக்கொண்டான்
தாயைப் பழித்தாலும்
தண்ணீரைப் பழிக்க அஞ்சினான்..

கரை யில் மோதும் அலையைப் பார்த்து
கவலையை அதில் மறந்தான்..
கையில் நீரெடுத்து கன்னத்தில் அதைத் தெளித்து
காதலியுடன் களிப்புற்றான்..

ஆர்ப்பரித்து ஓடிய ஆறுகள்
அணைகளால் முட்டி முடங்கிப் போனது..
சிமெண்ட் கலவைகளில் சிக்கிப்போனது..

ஆறு இங்கே அரசியலாய் ஆனது
அள்ளிய மணலும் நீரும்
பணமாய் மாறியது..
நீருக்கான நிஜ யுத்தம்
மூளும் நாளும் தொலைவில் இல்லை..
இதை உணரும் நிலையில்
நாமும் இல்லை..!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com