ஆறோடும் நீரோடும்; ஆபிரகாம் வேளாங்கண்ணி

பஞ்ச பூதங்களுள் ஒன்றான
நீரை வைத்து விளையாடும்
நெஞ்மற்றோர் அக்கத்து
பக்கத்து மாநிலத்தவர்

கேட்டால்  தரமாட்டார் அதனினும் 
பிடுங்கி எடுத்தால் தான் உண்டு
அதுவரை" ஆறோடும் நீரோடும் " 
என்று கனவு காண்பதை அறவே விடு

குடத்தில் கல்லை போட்டு 
தண்ணீர்  குடித்து தாகம் தீர்ந்த 
காக்கை கதையை திரும்ப படிக்கிறோம்
தண்ணீர் வந்த பாடில்லை

நாம் இனி காற்றையே 
உண்ணவும் குடிக்கவும் 
நேர்ந்தாலும் நேரலாம்
உடும்பு வர்க்கம் போல்
இவ்விடும்பையிலிருந்து 
என்று விடுபடுவோமோ

நம்குல மக்கள் குடிக்க
தண்ணீர் கொடுக்கலாம்
நிலமகள்  குளர்ந்திட நாம்
முதலில் ஏர் பூட்டுவோம்
மார்த் தட்டி நில்லுவோம்
யார் நெட்டி பார்த்தாலும்
கூருகட்டி வைத்திடுவோம்
பார் மெச்சி பேசும் படிக்கு
அன்றே ஆறோடும் நீரோடும்
குறையின்றி மகிழ்வோம்

சரிக்கிவிடும் பாறையிலே
நமது சர்க்காரும்; 
சருக்கி சருக்கி விழுந்து 
எழுந்து நடக்கவே இல்லை இது
நாள் வரைக்கும்

ஓடும் நதிகள் எல்லாமும்
வாழும் உயிர்கள் ஆகும்
வாழவைக்க  உயிர்களை
ஆறோடும் நீரோடும் உறவு
கொண்டாடும்  நாள் வாராதோ

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com