ஆறோடும் நீரோடும்; உத்ரன்

நீரோடும் ஆற்றை நிச்சயமாய்ப் பார்க்கவென்றால்
ஓடோடிப் போய் எமனை ஒன்றாய் முற்றுகையிட்டு
கர்மவீர ர் காமராஜரை கடனாகச் சிலகாலம்
வாங்கிவந்தே அவரை வகையாய் ஆளச் சொல்லலாம்!

தூக்கத்திலும் தமிழ்நாட்டைத் தூக்கி நிறுத்துவதையே
வாழ்வின் குறிக்கோளாய் வாழ்ந்த மனிதரவர்
தன்குடும்பம் எனத் தமிழ்நாட்டையே த த்தெடுத்து
அதற்கெனவே வாழ்ந்த ஆதர்ஷ புருஷர் அவர்!

அதிமுக ஆட்சியிலே ஆற்று மணல் கொள்ளை
தாதுமணல் கொள்ளை தகுதியற்ற அமைச்சரென
போட்ட ஆட்டம் பொதுவாய்க் கொஞ்சமல்ல
நாட்டைக் கூறுபோட்டது நயவஞ்சக க் கூட்டம்!

மண்ணை விற்று ஆட்சி நடத்தும் மானங்கெட்ட அரசை
பூவுலகில்    வேறெங்கும்   போய்ப்பார்க்க    முடியாது!
குடிமகனுக்கு ஊற்றிக் கொடுத்து கோலோச்சும் அரசாங்கம்
புவியினிலே இதுவன்றி புகலுதற்கு வேறிருக்காது!

தமிழனின் பெருமையெல்லாம் சங்க காலத்தோடே
மறைந்தே போயிற்றோ?மறுபடியும் முகிழ்க்காதோ?!
ஒருவனுக்கு ஒருத்தியென்ற உயர்ந்த பண்பாடு 
ஏட்டில் மட்டுமே!ஏகமாய்த் தொடுப்பு...வைப்பு!

அகண்ட காவிரியும் அன்றைக்கு நிறைந்திருந்தது
நிகண்டு படித்தொழுகியோர் நிறையப்பேர் இருந்ததனால்!
காசொன்றே வாழ்வென்று கங்கணம் கட்டியோரெல்லாம்
கடுஞ்சிறையில் வாடினாலும் காசாசை போகவில்லை!

இனியும் எதை எழுத?எங்கு போய்ப் புலம்ப?
தனியாய்க் கிடந்து தவிப்பதனால் பயனென்ன?
நீரும் போனது!மணலும் போனது! ஆற்றையாவது நாம்
அவர்களிடமிருந்து மீட்க ஒன்று சேர்வோம்!ஓடி வாருங்கள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com