மேகத்தில் கரைந்த நிலா: -ஷஹி சாதிக்

இரவின் சாவியைத் தொலைத்துவிட்ட
வானம்.
தடவலில் நெகிழ்ந்த காற்று...
மேகத்தின் மோகம்
தேகம் பட,
வெண்ணிலா!

நேராய் நின்றபோதும்
தேயவில்லை சூரியனோடும்!
ஆனால்...

உஷ்ணமும்
உருக்கா என் தேகம்!
ஒரு
உரசலில் கரைந்ததன்
அர்த்தம் ஏதோ?

ஒரு நொடி,
பனியாகிவிட்டேன்!
மனம்
பிணி ஆட்கொண்டு,
பலியாகிவிட்டேன்...
இனி ,
உருகியே
உனதாகிவிட்டேன்!
இளம் இன்பமே
முற்றலில்
தினம் வேண்டும் என்று!
கணம் கணமாய்
ஒழிந்துகொண்டு
நாணம்
நான் பெற்றேன்!

என்
ஆவி பிரிந்து
இருளோடு கலந்து,
இரவோடு உனைக்கான
முழுதாக மறைந்து.
இரவாக நானாகி
உரவாட வந்தேன்.

நீ சேய்மை...
சில நாழி
நீ படரும் குஷி!

தினம் இருந்த
தியானம்
திடீரெனக் கலைந்திட,
திருத்தப்படா
ஒரு
மறு
உருப்பெற்று நாமாகி!

நீ மஞ்சு!
நான் நிலா,
நாம் பனியாகிவிட்டோம்!

தாபத்தால் உருகி,
சேய்மையின் கொடுமை
தாகித்த இயற்கை...

நீ
குளிர்த் தீ!
நீ போர்த்திவிடும் போது
நான் உருகியே
போனேன்...

என்
தவம் கலைந்தது!
மோட்சம் அருந்தாலும்

குண்டலிணி
தாக்கிட
வெண்ணிலவும் நிறம் மாறுமோ?

ஒரு புயல்-என்
கூந்தல் கலைத்தது!
ஆனாலும்
நானிருந்தேன்.

அந்த
மஞ்சு சாம்ராஜ்யம்.
எந்தன்
தேகம் தாக்கிய மின்னல்
கந்து!

ஒரு
நொடி இறந்து உயிர்த்த
உன் மடி.

மறு நொடி
இனித்துவிட்டேன்...
சர்க்கரையாகிவிட்டிருந்த
என் யாமம்.
கரைத்துச் சுவைத்த
மேகம்...

ஒரே இரவு!
ஒரே யாமம்!
பல பருவம்
ஒரு நாளில்.
நடு இரவிலேயே
கரைந்து தீர்த்து
நனைந்து போன
பூமி சாட்சி!

அந்த மேகன்,
நனைந்த
மந்த யாமத்தில்
அனைந்து போன
எந்தன் ஒளி...

கரைந்துகொண்டே
அணைந்த அந்த
நாள்!

உருகியே நீயாகி,
புவியிலே
பனியாகி
உன்னிலே நானாக
உயர்ந்துனில் நான் சேர...
மருபடி அவதரித்தேன்!

நீ தந்த
முயற்கறை இன்னும்
நீங்காத
வள்ளுறை தோய்த்தாலும்
வின்னை...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com