நிசப்த வெளியில் : நுஸ்கி இக்பால் 

இலைகள் அசையும் சத்தமும் பௌர்ணமி உண்டு மிஞ்சிய வெளிச்சமும் நாய்களின் கால்களினால் தோண்டப்படும் கடற்கரை மணல்களும்மெதுவாய் நகர்த்தி செல்கின்றன நிசப்த வெளியை .....முறிந்து தொங்கும் மரக்கொப்புகளாய் உயிர்ப்பற்று நிலத்தையே பார்த்தபடி எல்லைக்கோட்டை காணத்துடிக்கின்றது அவளது மனம் .....தூரத்தில் தெரியும் விண்மீன்களை அவள் ஒவ்வொரு இரவும் எண்ணுகிறாள்மங்கிய விழிகளுக்கு மருந்தாக குப்பி விளக்கை எரியவிடுகிறாள் ....அவ்வப்போது வயிற்றை தடவும் அவளது கைகளில் நான்கு தொப்பிள்கொடிகள் நாணிப்போய் நிற்கின்றனவயிற்றில் தழும்புகளாக ......அந்த நிசப்த வெளியில் நிலவுக்கு கண்ணீர் கொடுத்து தாகம் தீர்க்கின்றாள் நாளையும் நேரத்தோடு என் வீட்டில் வந்திவிடுவென்று .....

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com