நிசப்த வெளியில்: மாரிசுப்ரமணியன்

நிசப்தத்தின் வெளியில், 
சப்தமில்லாமல் நிற்கின்றேன்.
சகாப்தம் செய்திட, சபதம் ஏற்கின்றேன்.
முடியாமல், தோற்கின்றேன்.
நல்முடிவை, எதிர்பார்க்கின்றேன்.
விழுந்தாலும் எழுவேன், வீனாக அழாமல், 
தானாகவே நானாகவே, என்னைத்தேற்றி,
நம்பிக்கை தீபம் ஏற்றி, 
தானாகவே நானாகவே எழுகின்றேன்.
வெற்றி பெறும் பொழுது, 
என்னைச்சுற்றியிருந்த கூட்டம்,
பறிபோன வெற்றியால், 
வற்றிவிட்ட ஓடையானதே..
நிசப்தத்தின் வெளியில், 
என்னைப்பார்க்கின்றேன்,
புத்தனைப்போல, வாழாவிட்டாலும், 
புனிதத்துவமிக்கவனாக, வாழ முயல,
நிசப்தத்தின் வெளியில், 
நிஜங்களின் அணியில்,
நமையும் சேர்ப்போம், 
நன்மையும் சேர்ப்போம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com