பிஞ்சு மனங்களும் செல்ல மழையும்: மணிமாலா மதியழகன்

பள்ளிக்கூட நேரம் தவிரபறந்து திரிந்த காலமெல்லாம்இன்றைய தளிர்களுக்குஇயலாத காரியமானதே!ஓடியாடி விளையாடும் விளையாட்டுகளுக்குவிடைகொடுத்து அனுப்பிவிட்டுகருங்கல் காடுகளில் குழந்தைகளைமுடங்க வைக்கும் கொடுங்காலமாய் ஆனதே!மன்னர் காலத்தில் மட்டுமல்லாதுநாம் வாழ்ந்த காலத்திலும்அடிக்கடி மாரியின் சுகத்தில்மனம் குளிர்ந்திருந்தோமே!காற்றாலையை காணாமலாக்கிகருங்கல் காடுகளை வளர்த்துபாளமாய்ப் பிளந்தபூமியில் இன்றுபொசுங்கிப்போய் கிடக்கிறோமே!மண்ணுக்கும் விண்ணுக்கும்உறவுக்குப் பாலம் அமைத்தவானமும் இன்று வாய்க்குப்பூட்டுப் போட்டுக்கொண்டதே!வளர்ச்சியென எண்ணி இறுமாந்துநுனிக்கிளையில் அமர்ந்துஅடிக்கிளையை வெட்டும் கொடுமையைபூமித்தாய் தாங்கமாட்டாளே!வளரும் தலைமுறை இம்மண்ணில்வசந்தமாய் என்றும் செழித்திடவிதைகளை ஊன்றி வாழ்வில்விடியலைக் காண்போமே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com