பிஞ்சு மனங்களும் செல்ல மழையும்: மாரியப்பன் ஊர்காவலன்

வான்மேகம் ஒன்று கூடிமண்மகளை பெண் பார்க்கமேளம் தாளம் இடியோசையோடுமின்னல் ஒளியில் வருணதேவன்வரும் அழகைக் கண்டுபிஞ்சு மனங்களின் நெஞ்சமெல்லாம்இன்ப ஊற்று பொங்குதய்யாகண்கள் காண ஏங்குதய்யா.......!!நித்தம் நித்தம் என்வீட்டு முற்றத்தில்முத்தமிட்டு செல்லும் மழையேஎன் கன்னக்குழியில் கண்ணமிட்டுசென்ற இடம் தெரியலயேசெல்ல மழையே.......!!நீ முத்தமிட்ட மண்ணை எடுத்துமலைக்கோட்டை நான் கட்டுவேன்மழைமகளே உனைச் சிலை வடித்துஅதில் சாமியாய் குடியமாத்துவேன்செல்ல மழையே...!!விடிய விடிய கொட்டிய மழையில்விடுதலையான ஈசலைப் பிடித்துகாகிதப்பூ கப்பலில் ஏற்றிமழைநீரில் மூழ்கும் வரைகரைமீது காத்திருப்பேன்செல்ல மழையே....!!!தட்டான் விட்டில் பூச்சியெல்லாம்தேடித் தேடி நான் அடிப்பேன்தெரு விளக்கு அனையும் போதுமின்மினிப் பூச்சியை பார்த்து ரசிப்பேன்செல்ல மழையே....!!!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com