நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் இளவல் ஹரிஹரன்

அகண்டநதி யாகத்தான் முன்பி ருந்த   ஆறுகளெல் லாமின்று முகஞ்சு ருங்கிப்பகட்டிழந்த இளம்பெண்போல் மாறிப் போக   பாழ்மனிதர் மணலள்ளி மரங்கள் வெட்டிசுகக்கேடாய்க் குப்பைகளைக் கொட்டி எங்கும்    சூழச்சாக் கடைநீரைக் கலக்க விட்டுஅகக்கேடாய் ஆறுகளின் கற்ப ழித்தார்     அற்பசுகங் காணவியற் கைகெ டுத்தார்.மலையிருந்து உருண்டுவருங் கூழாங் கற்கள்     மாநதியின் நீர்ப்பெருக்கில் மணலாய் மாறிநிலையாக நதிநீரைப் பூமி சேர்க்கும்     நிறைவளமும் இருகரையிற் சேர்த்துப் போகும்விலைவைத்து விலைபேசி மணலை யள்ளி     விற்கின்றார் வளங்கெடுக்கும் எண்ண மின்றி.நிலத்தடிநீர் உறிஞ்செடுத்து வணிகஞ் செய்து     நிலைகெட்டுப் போகின்றார் மாந்த ரின்று.கோலநதி நீர்ப்பரப்பாய்க் கொண்ட வாறு     கோவணமாய்ப் போச்சுதையோ சுருங்கி யின்றுநீலவிடம் பாரித்தாற் போல எங்கும்     நிறைசேற்றுக் கால்வாயின் நீர்தான் போகும்ஆலையெலாம் கழிவுநீர் கொண்டு சேர்க்கும்     அத்தனையும் சீர்கேடாய் ஆக்கி நிற்கும்ஓலமிட்டு என்னபயன் நதிக்க ரையின்     ஒழுங்கற்ற நினைவலைகள் மிஞ்சு தன்றோ!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com