நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் நம்பிக்கை நாகராஜன்

நதிக்கரையின் நாகரீகம் நாடிய போது   நத்தைபோல நகர்ந்திருந்து பயணம் கண்டோம்உதித்துவரும் ஒளியவனே வணக்கம் என்றோம்   உலகினிலே “வழிதருவான் அவனே” என்றோம்மதிவளர மனம்விரிய மாற்றம் காண   மகிழ்வடைய உயர்வடைய வேட்கை கொண்டோம்சதிகளின்றி உறவிலொன்றி வாழ்ந்தோம் ;அந்த   “சந்தமென்ற மனிதகுலம”; போனது எங்கே ?        “சந்தையிலே மலிவடைந்த” பொருளைப் போலே   சலிப்படையும் நிலையினிலே மனிதர் தோன்றசிந்தையிலே தோன்றுகின்ற எண்ணம் எல்லாம்   சுயநலத்தை காட்டுகின்ற “சூதும் வாதும்”பந்தையத்தில் வெல்லுகின்ற குதிரை போலே   பாதகத்தில் வென்றிடத்தான் வழிகள் கண்டார்சொந்தமென்றும் பந்தமென்றும் மறந்தே நின்று   சுகமெல்லாம் தமக்கென்றே “ஆசை கொண்டார்”கற்காலம்  கடந்துவந்த மனிதன் இன்று   கற்பனைக்கும் எட்டாத அழிவில் நின்றுநிற்பதற்கும் நேரமின்றி பறக்கும் ஓட்டம்   நேர்மையதை “எடைபோட்டுக் கேட்கும்” நாட்;டம்பற்பலவாய் நினைவலைகள் பழுதாய் ஆக   பழங்கதையாய் நதிக்கரையின் நினைவே போக தற்காலம் கற்காலக் கோலம் ஆச்சு     “தறிகெட்டு நாகரீகம்” தலைகீழ் பேச்சு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com