சமூகக் குற்றம்: அழகூர். அருண். ஞானசேகரன்

சழக்கர்கள் புரிந்திடும் குற்றமெலாம் -- கொடிய      சமூகக் குற்றமென் றுணராரோ?அழகெனத் தக்கதோ இன்னதெலாம் -- கொண்ட      அறிவீனந் தன்னின் வெளிப்பாடன்றோ ?வழக்கிட்டு இவர்களைத் தண்டித்திட -- பலப்பல      வருடங்கள் ஆவதும் கொடுமையன்றோ ?சழக்கர்கள் ஒழிக்கப் படவேண்டும் -- அந்த      சமூகம் நடுங்கிடச் செயவேண்டும்!கள்ளப்பணம் அடிக்கின்றக் கொடுமையைக் கண்டோம்,     கற்பழிப்பு எங்கெங்கும் நடந்திடக் கண்டோம் !வெள்ளமென செல்வமதைச் சேர்த்துவிட துணை     வேந்தர்களும் கொள்ளையிடும் கொடுமையைக் கண்டோம் !எள்ளளவும் தன்மானம் இல்லாமக்கள் தினமும்      இழிவானச் செயல்புரியக் காண்கிறோம் இங்கே! உள்ளபடி நாட்டில்நடக்கும் கொடுமைகள் இதனால்      உலகமெலாம் நமைபழிக்கக் காண்பதே உண்மை!ஆற்றினிலே மணர்க்கொள்ளை அரசியலார் துணையுடனே,       அற்பத்தனம் இதைப்போன்று வேறில்லை உலகினிலே!போற்றத்தகும் கல்வித்துறை தனிலுமிக் கொள்ளை ,      போக்கற்றார் வேட்க்கைக்கு வானமதே எல்லை!நூற்றுக்கு நூறுகொள்ளை பதிவுத்துறை தனிலே      நொந்திட்டு வருந்தாதார் தமிழகத்தில் இலையே!கூற்றிதனைக் காண்பதெலாம் கொடுமையிலும் கொடுமை,      கொள்ளையிடும் கூட்டமதை ஒழிப்பதுநம் கடமை!குற்றமில்லை என்றாச்சு கொலைகொள்ளை எதுவும்,      கொடுமதியர் ஆட்சியிலே எதுவொன்றும் நடக்கும்!உற்றநம்மின் பண்பிற்கு அழகெனவுந் தகுமோ,      உலுத்தரிதை உணராமல் இருப்பதுவும் முறையோ?பெற்றநம்மின் வாக்காலே பேதையரைத் தேர்ந்தோம்,       பெரிதுமாய் கொள்ளைகளே நடந்தேறக் கண்டோம்!சிற்றறிவுக் கூட்டமதை ஒழிப்பதேநம் கடமை,       சிந்தித்து செயலாற்றா திருப்பதுநம் மடமை!ஆலெனவே தழைப்பதென்ன குற்றசெயல்கள் எல்லாம்,      அவலமிது தொடர்வதற்கோ சுதந்திரத்தைப் பெற்றோம்?சீலமெனத் தக்கதிதோ? கண்டும்பொறுக்க லாமோ,       சீரழிக்கும் பாவிகளை மன்னிக்கவும் தகுமோ?கோலமிதைக் காண்பதெலாம் கொடுமையிலும் கொடுமை,       குற்றங்கள் நடப்பதனை பொறுப்பதுவும் மடமை!காலமென்ன பதில்சொல்லப் போகுதிதற் கெல்லாம்,கருணையின்றி மாய்ப்பதுவே தக்கதென்று சொல்லும்!             

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com