அந்நாளே  திருநாள்: செந்தில்குமார் சுப்பிரமணியன்

ஆற்றல் மாறாக் கோட்பாட்டை
அடியேனுக்குரைத்தார்
நியூட்டனன்று  ஆற்றலை

ஆக்கவும் அழிக்கவும் இயலாது
 உருமாறும் இதை உணரப் பா,

ஆழ்ந்து மூழ்கி சிந்திக்க
ஆங்கோர் எண்ணம் 
உதித்ததுவே

அன்பும் காதலும் ஆற்றலப்பா
அழித்திட என்றும் முடியாது,
இனமும் மொழியும் இன்ன பிற
வடிவமும் இதற்கு இல்லையப்பா, 

ஆழ்கடல் ஆழம் இதற்குண்டு,
ஆழ - உயரம் அறிவார் யார்?
அன்னை வயிற்றின் நினைவுகளோ
முன்னை பிறவி தொடர் நிலையோ?

யாதென யாரும் அறிவதில்லை
அறிந்திட விடைதான்
புரிவதில்லை,

அணிமா, மஹிமா லஹி
மாவாய் யோகிய ருக் கீந்த
சித்திகளை - ஆற்றல் என்றார்
ஈசனுமே,

ஆழ்ந்து ஆழ்ந்து உள் செல்ல
அகமும் - புறமும் இறைநிலையாம்

அன்பின் உயர்நிலை - காதல் என்று -
நாரதர் நவின்றார் தன்

சூத்திரத்தில்,
ஆத்திரம் விட்டு யான் எனது
என்பதும் அற்று பற்றற்று,
சாத்திரம் கடந்த ஞான நிலை
சித்திக்கும் அந்த பொன் நாளை
போற்றி மகிழ்வோம் புவிமீதில்.

அன்பும் அறனும்
தெரிந்தோர்க்கு நாளும்
கோளும் துணையாகும்,
நற்கதி கிடைத்து வீடு வர,
சற்குரு அருளை நாடி டுவோம்.

தூங்கா நினைவுகள்
துணை கொண்டால்,
குருவும் திருவும்-துணையாமே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com