நினைவுப் பெட்டகம்-2017: ரெத்தின.ஆத்மநாதன்

வாழ்க்கை யிலெத்தனையோ வசந்தங்கள் வருவதுண்டுவருகின்ற  அத்தனையையும்    வசந்த     மாக்குந் திறன் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை ஏழையா யிருந்தாலும்அந்தத் திறமை கொண்டோர் அதிமிகு அதிர்ஷ்டசாலிகளே!மணவாழ்க்கை  தனில்  புகுந்து  மகிழ்வாய்  வாழுங்கால் பேர் சொல்ல ஒரு பிள்ளை பிறந்திடவே வேண்டுமென்று எல்லார்   மனதிலும்   இயற்கையாய்   வரும்   ஓர் ஆசை நிறைவேற்றங்   கண்டாலே   நிம்மதியில்    மனதுழலும்!அந்த  நிம்மதியும் அதைமீறும்  அளவிலாப் பேரானந்தமும் பேரன்  பேத்தி  என்று  பிறக்கையிலே  பெரு  மடங்காய்உள்ளத்தில்    மட்டுமல்ல   உடலெங்கும்   ஓடிப்  பரந்துஉலகையே சொர்க்க மாக்கும் உடலையும் வெப்பமாக்கும்!நினைவுப்  பெட்டகமாய்  நிழலாடும்  அச் சிறுசுகளால்ஆனந்தம் பல மடங்காகும் அவலங்கள் குறைந்தே போகும்ஒவ்வொரு நிமிடமும் அவர் உவகை முகம் காணும்போதும்துன்பங்கள்  மறந்து  போகும்  துள்ளிடும்  இளதா  யுள்ளம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com