யுத்தம் செய்யும் கண்கள்: கவிஞர் ராம்க்ருஷ்

கண் முன்னே நடக்கும் கயமைகள் காணும்போதும்பெண்களின் வன்கொடுமைத்துன்பம் கேட்கும்போதும்ஆண்களின் ஆணாதிக்கத் தீமைகள் அறியும்போதும்கண்கள் யுத்தம்செய்யும் முனைப்புடன் சிவக்கின்றனஅரசியல் வீதிகளில் பொய்கள் விற்கப்படும்போதும்உரசும் சாதிச் சண்டைகள் நன்மைகளை அழிக்கமுரசு கொட்டிக் காதலையும் சாவில் முடிக்கும்போதும்சிரசு கனமாகிக் கண்கள் யுத்தம் செய்ய முனைகின்றனலஞ்சங்களில் தஞ்சமாகும் கல் நெஞ்சர்களைக் காணவஞ்சம் தலைக்கேறி நெஞ்சமெல்லாம் கொதிக்கின்றதேதஞ்சமென்று வந்தவரை ஏமாற்றித் தட்டிப் பறித்திடும்நஞ்சொத்த மனித நரிகளைக் காணும்போதெல்லாம்கடும் யுத்த செய்யும் முனைப்பிலே சிவக்கும் கண்கள்விடும் மூச்சுக் காற்றிலும் வெப்பம் அலையடிக்கிறதேபடும் துன்பங்களுக்கு சுறுசுறுப்பின்மையே காரணமெனதிடுமென அறியும்போது கண்கள் யுத்தம் செய்கின்றனகாதலில் கட்டுண்ட ஆண் பெண்ணின் கண்களோமோதலில் மோகமாகி யுத்தத்திற்கு முனைகின்றனமோதலும் வன்முறையற்ற யுத்தமாக நின்றிடவேகாதல் உலகில் இதழ்களின் யுத்தம் நடக்கிறதோ

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com