சுவையான பாஸந்தி

பால் பாத்திரத்தில் ஒட்டாத வண்ணம் நன்றாக கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
சுவையான பாஸந்தி

தேவையானவை :

க்ரீம் மில்க் - 1/2 லிட்டர் சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன் 
நறுக்கிய முந்திரி பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் 
ஏலக்காய் பொடி - 1/2 டேபிள் ஸ்பூன் 

செய்முறை 

  • நல்ல கனமான அடியுள்ள பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பாலை ஊற்றவும்.
  • பால் நன்றாக கொதிக்கும் வரை சூடுபடுத்தி அடிப்பகுதியில் பிடிக்காத வண்ணம் கிளறிக் கொண்டே இருக்கவும்.
  • பால் பாதியளவு ஆகும் வரை சுண்டக் காய்ச்ச வேண்டும் 
  • இப்பொழுது சர்க்கரையை சேர்த்து 2-3 நிமிடங்கள் நன்றாகக் கிளறி விடவும் 
  • நறுக்கிய பாதாம் பருப்பு மற்றும் முந்திரி பருப்பைச் சேர்க்கவும். பின் நன்றாகக் கலக்கவும்.
  • அடுப்பை அணைப்பதற்கு சிறிது நேரத்துக்கு முன் ஏலக்காய் பொடி சேர்த்து பரிமாறவும். 

பால் பாத்திரத்தில் ஒட்டாத வண்ணம் நன்றாக கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து கொண்டால் பால் கருகுவதை தடுக்கலாம் பாலின் அளவு பாதியாக குறைந்த பிறகு சர்க்கரையைச் சேர்க்கவும். இல்லையென்றால் அது கலவையை கெட்டியாக மாற விடாது. குங்குமப் பூ சேர்த்தால் சுவையுடன் சேர்ந்து நிறம் கிடைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com