கதம்ப சாம்பார்

தேவையான காய்கறிகளை எடுத்து சுத்தம் செய்து நீளவாக்கில் திட்டமான அளவில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
கதம்ப சாம்பார்


தேவையான பொருள்கள்:

(கத்தரி, வெண்டை, கேரட், பீன்ஸ்,
முருங்கைக்காய், வாழைக்காய்,
உருளைக்கிழங்கு, குடை மிளகாய் என
எல்லா விதமான காய்கறிகளையும் சேர்க்கலாம் -
2 கிண்ணம்
துவரம் பருப்பு - 1 கிண்ணம்
வெங்காயம் - 2
தக்காளி - 2
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
புளி - எலுமிச்சை அளவு
கடுகு - உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக் கேற்ப
கறிவேப்பிலை,கொத்து மல்லி -  சிறிது

செய்முறை:

தேவையான காய்கறிகளை எடுத்து சுத்தம் செய்து நீளவாக்கில் திட்டமான அளவில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

குக்கரில் துவரம் பருப்பு, பெருங்காயத் தூள், மஞ்சள் தூள், சீரகம் சேர்த்து 3 விசில் விட்டு வேக வைத்து எடுத்து கடைந்து கொள்ளவும். 

பின்னர்,  வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

அடுத்து, தக்காளியை வதக்கவும்.   பின்னர், நறுக்கி வைத்துள்ள காய்கறிகளைச் சேர்த்து வதக்கவும்.

அத்துடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர்விட்டு மூடி வேகவிடவும். 

காய் நன்கு வெந்தவுடன், கடைந்த பருப்பு மற்றும் புளிக் கரைசல் சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும்  பொடியாக நறுக்கிய கொத்துமல்லி தழையைத் தூவி இறக்கிவிடவும்.

வாசனையான கதம்ப சாம்பார் தயார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com