அல்லம் பச்சடி

அல்லம் பச்சடி

தெலுங்கில் அல்லம் என்றால், இஞ்சி. பச்சடி என்றால் ஊறுகாய். 10 நாட்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம். வயிற்றுக்கு மிகவும் நல்லது, இந்த அல்லம் பச்சடி.


தேவையான பொருட்கள்

தோல் சீவி பொடியாக நறுக்கின இஞ்சி - முக்கால் கிண்ணம்
வெல்லம் - முக்கால் கிண்ணம்
புளி பேஸ்ட் - ஒன்றரை மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
பூண்டு - 1 பல்
வறுத்த வெந்தயம் - 1 தேக்கரண்டி
தாளிக்க:
நல்லெண்ணெய் - 3 மேசைக்கரண்டி
கடுகு  - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2, கிள்ளியது
உப்பு - ருசிக்கேற்ப

செய்முறை:
இஞ்சி, பூண்டு, உப்பு, புளி பேஸ்ட், மிளகாய்த்தூள் ஆகியவற்றை, மிக்சியில் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். பிறகு வெல்லம், மற்றும் எண்ணெய் விடாமல் வறுத்த  வெந்தயம் ஆகியவற்றையும் சேர்த்து  அரைக்கவும். ஒரு வாணலியில் நல்லெண்ணெய் சுட வைத்து, மேற்கூறிய தாளிப்புக்களைச் சேர்க்கவும்.

பிறகு அரைத்த இஞ்சி விழுதையும் சேர்த்து, 3-4 நிமிடங்கள் சிறு தீயில் வதக்கி இறக்கவும். அல்லம் பச்சடி தயார். சூடான பெசரெட்டுடன், பரிமாறவும். சுவையாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com