புளிப்புக்கூட்டு

புளிப்புக்கூட்டு

தேவையானவை:
சேப்பங்கிழங்கு - சிறிது
கொத்தவரை - சிறிது
பச்சை மொச்சைபருப்பு - சிறிது
பச்சை பட்டாணி - சிறிது
வாழைக்காய் - பாதியளவு
வெண்பூசணி - 1 துண்டு
மஞ்சள் பூசணி - 1 துண்டு
அவரைக்காய் - சிறிது
நிலக்கடலை - சிறிது
சேணைக்கிழங்கு - 1 துண்டு
வறுத்து அரைக்க:
மிளகாய் வற்றல் - 4
பச்சை மிளகாய் - 2
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு துண்டு
தனியா - 4 தேக்கரண்டி
இவற்றை சிறிது எண்ணெய்யில் கருகாமல் வறுத்து 1 மூடி தேங்காயுடன் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
கடலைப் பருப்பு - 50 கிராம்
புளி -  எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

செய்முறை: சேணைக்கிழங்கு, வாழைக்காயை மட்டும் நீளவாக்கில் வெட்டவும். பின்னர், ஒரு அடி கனமான பாத்திரத்தில் நறுக்கிய மற்ற காய்களுடன்  கடலைப்பருப்பு, மஞ்சள் பொடி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு வேகவிடவும்.

(சேப்பங்கிழங்கு தோல் சீவி இரண்டாக வெட்டினால் மற்ற காய்களுடன் சேர்ந்தே வேகும்). காய்கறிகள் வெந்த பின்பு புளியை உப்பு சேர்த்து கரைத்து வெந்த காயுடன் சேர்த்து ஒரு கொதிவிடவும்.

பின்னர், அரைத்த விழுது சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும்.  கொதித்து வந்ததும் இறக்கி, கடுகு கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.

குறிப்பு: இதை சாப்பாட்டில் கலந்து சாப்பிட மோர்மிளகாய், வடகம், வற்றல், அப்பளம் ஜதையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com