பன்னீர் - குடைமிளகாய் டிக்கா

ஒரு கிண்ணத்தில் கடுகு எண்ணெய்,
பன்னீர் - குடைமிளகாய் டிக்கா

தேவையானவை:

கடுகு எண்ணெய் -  இரண்டு தேக்கரண்டி
கரம் மசாலா - கால் தேக்கரண்டி
பிளாக் சால்ட் - 1 சிட்டிகை
சீரகத் தூள் - அரை தேக்கரண்டி
கட்டி தயிர் - இரண்டு தேக்கரண்டி
ரெட் கலர் - ஒரு சிட்டிகை
தக்காளி - இரண்டு துண்டு (வட்டமாக நறுக்கியது)
பன்னீர் துண்டு - ஐந்து (வட்டமாக நறுக்கியது)
பச்சை குடைமிளகாய் - இரண்டு துண்டு (வட்டமாக நறுக்கியது)
எண்ணெய் - தேவையான அளவு
நீளமான குச்சி - ஒன்று
வெண்ணெய் - சிறிதளவு

செய்முறை :

ஒரு கிண்ணத்தில் கடுகு எண்ணெய், கரம் மசாலா, பிளாக் சால்ட், சீரக தூள், கட்டி தயிர், ரெட் கலர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பிறகு, பன்னீர், குடைமிளகாய், தக்காளி துண்டு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து இருபது நிமிடம் ஊறவைக்கவும்.

பின்னர், நீள குச்சியில் வெண்ணெய் தடவி குடைமிளகாய், பன்னீர், தக்காளி, குடைமிளகாய்,பன்னீர், தக்காளி, பன்னீர் ஆகியவற்றை ஒவ்வொன்றாக குத்தி வைத்து கொள்ளவும். பின், தவாவில் எண்ணெய் சிறிதளவுவிட்டு காய்ந்ததும் அதில் போட்டு சிறு தீயில் வைத்து பொன்னிறமாக வந்தவுடன் சாஸ்ஸுடன் பரிமாறவும். பன்னீர் - குடைமிளகாய் டிக்கா ரெடி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com