இரண்டாம்பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 6

நிரம்பிய சந்திரனே, நீயும்

நைவுஆய எம்மேபோல் நாள்மதியே, நீ இந்நாள்
மைவான்இருள்அகற்றாய், மாழாந்து தேம்புதியால்,
ஐவாய் அரவுஅணைமேல் ஆழிப் பெருமானார்
மெய்வாசகம்கேட்டு உன் மெய்ந்நீர்மை தோற்றாயே?

நிரம்பிய சந்திரனே, நீயும் எங்களைப்போல் ஒளி மங்குகிறாயே, மைபோன்ற வானின் இருட்டை அகற்றாமலிருக்கிறாயே, மயங்கித் தேய்கிறாயே, என்ன ஆயிற்று? ஐந்து முகங்களையுடைய பாம்பான ஆதிசேஷனைப் படுக்கையாகக் கொண்ட எம்பெருமான், கையில் திருச்சக்கரத்தை ஏந்தியவர், அவருடைய மெய்யான சொற்களைக் கேட்டு உன்னுடைய உடலின் ஒளியை இழந்தாயோ?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com