இரண்டாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் 2

ஏழுலகத்திலும் உள்ளவர்கள் செய்யும்

ஏஎ பாவம், பரமே, ஏழ்உலகும்
ஈபாவம் செய்து அருளால் அளிப்பார் ஆர்?
மாபாவம்விட அரற்குப் பிச்சைபெய்
கோபால கோள்அரி ஏறுஅன்றியே?

பிரம்மனின் தலையைக் கிள்ளியதால் சிவபெருமானுக்குப் பெரிய பாவம் வந்தது, அந்தப் பாவம் தீருமாறு அவருக்குப் பிச்சையிட்டுக் காப்பாற்றினான் எம்பெருமான், பசுக்களை மேய்க்கும் ஆயர்களின் குலத்தில் பிறந்தவன், வலிமைநிறைந்த ஆண் சிங்கம் போன்றவன்,

ஏழுலகத்திலும் உள்ளவர்கள் செய்யும் பாவங்களையெல்லாம் தன் அருளாலே தொலைப்பவன் அந்தப் பெருமானையன்றி வேறு யார்? அவனுடைய பெருமையை நாம் சொல்லமுடியுமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com