இரண்டாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் 3

திருமாலைவிட உயர்ந்த இன்னொரு

ஏறனை, பூவனை, பூமகள்தன்னை
வேறுஇன்றி விண்தொழத் தன்னுள் வைத்து
மேல்தன்னைமீதிட நிமிர்ந்து மண்கொண்ட
மால்தன்னின் மிக்கும் ஓர்தேவும் உளதே?

எம்பெருமான் காளையை வாகனமாகக்கொண்ட சிவனையும், பூவிலே பிறந்த பிரம்மனையும், தாமரையில் வீற்றிருக்கும் திருமகளையும் வேறுபாடின்றித் தனக்குள் வைத்துக்கொண்டவன், அவனை விண்ணோர் தொழுது வணங்குகிறார்கள், மேலே மேலே வளர்ந்து, மேலுலகங்களையெல்லாம் தாண்டிச்சென்று உலகை அளந்தான் அவன்,

அத்தகைய திருமாலைவிட உயர்ந்த இன்னொரு தெய்வம் உள்ளதா? (இல்லை.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com