முதற்பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 3

குறையாத, மிகுந்த சிறப்பைக் கொண்ட

அருகல்இலாய பெரும்சீர் அமரர்கள் ஆதி முதல்வன்,
கருகிய நீல நல்மேனிவண்ணன், செந்தாமரைக்கண்ணன்,
பொருசிறைப்புள் உவந்து ஏறும் பூமகளார் தனிக்கேள்வன்,
ஒருகதியின் சுவை தந்திட்டு ஒழிவுஇலன் என்னோடுஉடனே.

குறையாத, மிகுந்த சிறப்பைக் கொண்ட அமரர்களின் செயல்களுக்கெல்லாம் காரணமாக அமையும் ஆதி முதல்வன், நல்ல, கருநீல நிறத் திருமேனியைக் கொண்டவன், செந்தாமரைக்கண்ணன், அவன் கருடன்மீது ஏற வருகிறான், மகிழ்ச்சியில் கருடன் தனது சிறகுகளை அடித்துக்கொள்கிறது, அதன் மீது மகிழ்வுடன் ஏறுகிறான் அவன், எம்பெருமான், ஒப்பற்றவன், திருமகளின் கணவன், எனக்கு ஒருவழியில் மட்டும் இனிமை தந்துவிட்டு அவன் நீங்கிவிடுவதில்லை. (பலவழிகளிலும் இனிமை தருகிறான்.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com