இரண்டாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 8

பொன்மயமான திருமுடியைக் கொண்ட

பொன்முடி அம் போர்ஏற்றை, எம்மானை, நால் தடம்தோள்,
தன்முடிவு ஒன்றுஇல்லாத தண்துழாய் மாலையனை,
என்முடிவு காணாதே என்னுள் கலந்தானைச்
சொல்முடிவு காணேன்நான், சொல்லுவதுஎன்? சொல்லீரே!

பொன்மயமான திருமுடியைக் கொண்ட அழகிய போர் எருது, எங்கள் தலைவன், நான்கு பெரிய திருத்தோள்களைக் கொண்டவன், தன் பெருமைக்கு எல்லையே இல்லாதவன், குளிர்ந்த துளசிமாலை அணிந்தவன், என்னுடைய குறைகளைப் பொருட்படுத்தாமல் எனக்குள் கலந்தவன், அத்தகைய பெருமானை வர்ணிக்கும் வழி தெரியாமல் தவிக்கிறேன், அவன் புகழை எப்படிப் பேசுவது என்று திகைக்கிறேன், இதற்கு ஒரு வழியை நீங்களே சொல்லுங்கள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com