மூன்றாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 5, 6

திருவேங்கடத்தில் உறைகின்ற எம்பெருமானை

சோதிஆகி எல்லா உலகும் தொழும்
ஆதிமூர்த்தி என்றால் அளவுஆகுமோ
வேதியர் முழுவேதத்து அமுதத்தைத்
தீதுஇல் சீர்த் திருவேங்கடத்தானையே?

அந்தணர்களின் செல்வமான வேதத்தில் சொல்லப்படும் அமுதம், குற்றமில்லாத சிறப்பைக்கொண்ட திருவேங்கடத்தான், எம்பெருமான், அவனை, 'சோதிவடிவாக எல்லா உலகங்களாலும் தொழப்படுகிறவன், அனைத்துக்கும் மூலமான ஆதிமூர்த்தி' என்று சொன்னால் போதுமா? (போதாது, அவன் புகழை இன்னும் பலவிதமாக உரைக்க வேண்டும்!)

•••

பாடல் - 6

வேம்கடங்கள் மெய் மேல்வினை முற்றவும்,
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்,
வேங்கடத்து உறைவார்க்கு நம என்னல்
ஆஅம் கடமை அது சுமந்தார்கட்கே.

திருவேங்கடத்தில் உறைகின்ற எம்பெருமானை வணங்கி அவனுடைய பெயரைப் போற்றுவது நமது கடமையாகும், இக்கடமையை ஏற்றுக்கொண்டு செய்கிறவர்கள் இதற்குமுன் சேர்த்த கடன்கள் தீரும், இனி வரக்கூடிய வினைகள் யாவும் வெந்துபோகும், அவன் பெயரைச் சொல்வதன் மூலம் அவர்கள் தங்களுக்குத் தாங்களே நன்மைசெய்துகொள்வார்கள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com