பத்தாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 3

உன்னைப் பிரிந்து
பத்தாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 3


பாடல் 3

வீவன், நின் பசு நிரை மேய்க்கப் போக்கு
வெவ் உயிர் கொண்டு எனது ஆவி வேம்ஆல்,
யாவரும் துணை இல்லை, யான் இருந்து உன்
அஞ்சன மேனியை ஆட்டம் காணேன்,
போவது அன்று ஒரு பகல் நீ அகன்றால்,
பொரு கயல் கண் இணை நீரும் நில்லா,
சாவது இவ் ஆய்க்குலத்து ஆய்ச்சியோமாய்ப்
பிறந்த இத் தொழுத்தையோம் தனிமைதானே.

கண்ணா, நீ பசுக்கூட்டங்களை மேய்க்கச் சென்றால், உன்னைப் பிரிந்து என்னுடைய ஆவி பெருமூச்சு விட்டு வேகும், நான் அழிவேன், எனக்கு வேறு யாரும் துணை இல்லை, கரிய மையைப்போன்ற உன்னுடைய திருமேனியைப் பார்க்க இயலாமல் நான் தவிக்கிறேன், நீ பிரிந்துபோனால், என்னுடைய பகல் பொழுதுகள் முடியாமல் நீள்கின்றன. சண்டையிடும் மீன்களைப்போன்ற என்னுடைய கண்களிலிருந்து நீர் நிற்காமல் வழிகிறது, இந்த ஆயர் குலத்தில் ஆய்ச்சியர்களாகப் பிறந்த தொண்டர்கள் நாங்கள், எங்களுடைய தனிமைத்துயரம் தீரவேண்டும், அதற்கு நீ அருள்புரிவாய்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com