ஒன்பதாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 2

திருமகளின் கணவன்
ஒன்பதாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 2

பாடல் 2

கொடி ஏர் இடைக் கோகனத்தவள் கேள்வன்,
வடி வேல் தடம் கண் மடப்பின்னை மணாளன்,
நெடியான் உறை சோலைகள் சூழ் திருநாவாய்
அடியேன் அணுகப்பெறு நாள் எவைகொலோ.

கொடிபோன்ற இடையைக் கொண்டவளான தாமரையிலே எழுந்தருளியிருக்கும் திருமகளின் கணவன், கூரான வேலைப்போன்ற பெரிய கண்களைக் கொண்ட அழகிய நப்பின்னையின் மணாளன், நெடியவன், எம்பெருமான் உறைகிற திருத்தலம், சோலைகள் சூழ்ந்த திருநாவாய். அடியேன் அங்கே சென்று எம்பெருமானைத் தரிசிக்கும் நாள் என்றைக்கோ!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com