ஒன்பதாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 2

ஒலிக்கிற மணி
ஒன்பதாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 2

பாடல் 2

புகலிடம் அறிகிலம் தமியமாலோ,
புலம்புறு மணி தென்றல் ஆம்பலாலோ,
பகல் அடு மாலை வண் சாந்தமாலோ,
பஞ்சமம் முல்லை தண் வாடையாலோ,
அகல் இடம் படைத்து, இடந்து, உண்டு, உமிழ்ந்து,
அளந்து எங்கும் அளிக்கின்ற ஆயன், மாயோன்,
இகல் இடத்து அசுரர்கள் கூற்றம் வாரான்,
இனி இருந்து என் உயிர் காக்கும் ஆறு என்?

புகலிடம் அறியாமல் தனிமையில் வருந்துகிறேன், மாடுகளின் கழுத்தில் ஒலிக்கிற மணி, தென்றல், ஆம்பல், பகல் சென்றபின்னர் வரும் மாலை நேரம், அழகிய சந்தனம், பஞ்சமப்பண், முல்லை, குளிர்ந்த வாடை என அனைத்தும் என்னை வருத்துகின்றன, அகன்ற இந்த உலகத்தைப் படைத்து, இடந்தெடுத்து, உண்டு, உமிழ்ந்து, அளந்து, எப்போதும் காக்கின்ற பெருமான், ஆயன், மாயோன், போர்க்களத்திலே அசுரர்களுக்கு எமன், எம்பெருமான், அவன் என்னைக் காக்க வரவில்லை, இனி நான் எப்படி என் உயிரைக் காத்துக்கொள்வேன்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com