எட்டாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி  - பாடல் 3, 4

பெருமானின் திருவடிகளையும்
எட்டாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி  - பாடல் 3, 4


பாடல் - 3

ஆளும் ஆளார், ஆழியும் சங்கும் சுமப்பார்தாம்,
வாளும் வில்லும் கொண்டு பின்செல்வார் மற்றுஇல்லை,
தாளும் தோளும் கைகளை ஆரத் தொழக்காணேன்,
நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே.

எம்பெருமான் தன்னிடம் யாரையும் பணியாளாக வைத்துக்கொள்வதில்லை, சக்ராயுதத்தையும் சங்கையும் தானே சுமக்கிறார், அவருடைய வாளையும் வில்லையும் ஏந்திக்கொண்டு பின்னே செல்பவர்கள் யாரும் இல்லை, அத்தகைய பெருமானின் திருவடிகளையும், திருத்தோள்களையும், திருக்கைகளையும் நன்கு தொழவேண்டும், இந்தப் பூமியிலே நான் ஒவ்வொருநாளும் நாடும் வரம் அதுதான்.

பாடல் - 4

ஞாலம் போனகம் பற்றி ஓர் முற்றா உருவாகி
ஆலம் பேர் இலை அன்னவசம் செயும் அம்மானே,
காலம் பேர்வது ஓர் கார் இருள் ஊழி ஒத்து உளதால் உன்
கோலம் கார் எழில் காணல்உற்று ஆழும் கொடியேற்கே.

உலகத்தையெல்லாம் உண்டு, ஒரு குழந்தை வடிவாகிச் சிறிய ஆலிலையில் திருக்கண் வளரும் அம்மானே, உன்னைக் காணாத நாட்கள் மிக மெதுவாக நகர்கின்றன, ஒவ்வொரு கணமும், கருத்த இருளோடு கூடிய ஓர் ஊழிக்காலத்தைப்போல் உள்ளது, ஆகவே, கொடியவனான நான், உன்னுடைய அழகிய, கரிய திருத்தோற்றத்தைக் காண விரும்பி, அதில் ஆழ்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com