எதிரி உங்கள் நண்பன்

எதிரி உங்கள் நண்பன் - பால்தசார் கிராசியன்; தமிழில் : சந்தியா நடராஜன்; பக்.96; ரூ.80; சந்தியா பதிப்பகம், சென்னை - 83; )044 - 2489 6979.
எதிரி உங்கள் நண்பன்

எதிரி உங்கள் நண்பன் - பால்தசார் கிராசியன்; தமிழில் : சந்தியா நடராஜன்; பக்.96; ரூ.80; சந்தியா பதிப்பகம், சென்னை - 83; )044 - 2489 6979.
17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக அறியப்படும் ஸ்பெயின் நாட்டு எழுத்தாளர் பால்தசார் கிராசியன், நட்பு, கல்வி, உறவு, பழக்கம், ஒழுக்கம், மேன்மை என இன்னும் பலவற்றைப் பற்றி எழுதியவற்றின் தமிழ் வடிவம் இந்நூல்.
இன்றைய இளைஞர்களுக்கு நல்ல அறிவுரையை வழங்கக்கூடிய வகையில் இந்த நூல் அமைந்திருக்கிறது. நீ யார், என்ன செய்ய வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படிப் பேச வேண்டும், எப்படி முன்னேற வேண்டும் என அனைத்திற்கும் அறிவுரை கூறுவதாக இருக்கிறது இந்நூல்.
ஒழுக்கமே சுய நிறைவு உடையது. ஒழுக்கத்துடன் ஒருவர் இருக்கும்போது மற்றவர்களால் நேசிக்கப்படுகிறார்; அவர் இறந்த பின்பு நினைவு கூரப்படுகிறார் என்ற கருத்து முற்றிலும் உண்மை. மேலும், கல்லாதவர் குறித்து கூறும்போது, ""அறிவுமிக்கவன் எதையும் செய்ய இயலும், அறிவில்லாதன் ஓர் ஒளி மங்கிய உலகம்'' என்கிறார் நூலாசிரியர்.
"உன்னை பிறர் மதிக்க வேண்டும் என்றால், முதலில் உன் மீது நீ மரியாதை கொள்ள வேண்டும்' என்ற நூலாசிரியரின் கருத்தை மறுக்க இயலாது. இன்னும் எளிமையாக இந்நூலை மொழிபெயர்த்திருக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com