திராவிடரின் இந்தியா

திராவிடரின் இந்தியா - டி.ஆர்.சேஷ ஐயங்கார்; தமிழில்: க.ரத்னம்; பக்.192; ரூ.125; மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்; )044 - 2536 1039.
திராவிடரின் இந்தியா

திராவிடரின் இந்தியா - டி.ஆர்.சேஷ ஐயங்கார்; தமிழில்: க.ரத்னம்; பக்.192; ரூ.125; மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்; )044 - 2536 1039.
திராவிட நாகரிகம் குறித்தும் இந்து நாகரிக வரலாற்றில் அதற்குரிய இடத்தை வரையறை செய்யும் முயற்சியாகவும் எழுதப்பட்டுள்ள நூல்.
திராவிடர்களின் தோற்றம், திராவிட மொழிகள், திராவிடர்களின் இலக்கியம், இசை, சமய நம்பிக்கை, கட்டடக்கலை, வணிகம் போன்ற பல்வேறு கூறுகளையும் விரிவாக ஆய்வு செய்திருக்கிறார் நூலாசிரியர்.
கிறிஸ்து சகாப்தத்திற்கு முன்பே பாண்டியர்கள் அரசு நாகரிகத்தில் சிறந்து விளங்கியதை மெகஸ்தனிஸ் எழுதியுள்ள குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது. தொல்காப்பியத்திற்கு முன்னரே பல தமிழ்நூல்கள் இருந்துள்ளன. முச்சங்கங்களின் காலங்களும் அவற்றில் இடம் பெற்றிருந்த புலவர்களின் எண்ணிக்கையும் மிகைப்படுத்தப்பட்டவை. ஐந்திரம் தனி ஒருவரால் எழுதப்பட்டதன்று, இலக்கண ஆசிரியர்கள் பலரால் எழுதப்பட்டது. பெளத்தம் போன்று சமண சமயம் அதிக அளவில் தாக்கம் ஏற்படுத்தாதற்குக் காரணம், அது மனிதர் நலத்தில் (மணிமேகலை பசித்தோர்க்கு உணவு அளித்தது போல) அக்கறை செலுத்தாமல் புறக்கணித்து புழு, பூச்சி, எறும்பு போன்ற சிற்றுயிர்களின் நலத்தில் அதிகம் அக்கறை காட்டியதே - இவ்வாறு ஏராளமான புதிய தகவல்கள் நூல் முழுவதும் உள்ளன. குறிப்பாக, "பழங்காலத் தென்னிந்தியாவின் ஆட்சி' என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள கட்டுரை மிகவும் சிறப்பானது.
எல்லாச் செய்திகளையும் இலக்கிய, வரலாற்றுப் பார்வையில் மட்டும் பார்க்காமல், அறிவியல் பார்வையோடு கண்டு ஆசிரியர் பதிவு செய்திருப்பது சிறப்பு.
மொழிபெயர்ப்பு இன்னும் சற்று எளிதாக இருந்திருக்கலாம். இன, மொழி ஆய்வாளர்களுக்கு உதவும் நூல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com